Advertisment

NEET 2023 Exam Hall Rules: 12 மணிக்கு எக்ஸாம் ஹால் ஓபன் ஆயிடும்; மறக்காம இதை எல்லாம் செக் பண்ணுங்க!

நீட் தேர்வு 2 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றாலும், 1.30 மணி வரை மட்டுமே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். அதற்கு பிறகு வரும் தேர்வர்கள் அனுமதிக்கபட மாட்டார்கள்; தேர்வு மைய அறிவுரைகள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news

Tamil news Updates

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2023) மே 7 ஆம் (நாளை) தேதி நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடத்துகிறது.

Advertisment

இந்தநிலையில், நீட் தேர்வர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய தேர்வு அறை விதிமுறைகளை இப்போது பார்ப்போம். தேர்வு 2 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றாலும், 1.30 மணி வரை மட்டுமே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். அதற்கு பிறகு வரும் தேர்வர்கள் அனுமதிக்கபட மாட்டார்கள். எனவே அதற்கு ஏற்றாற்போல் சீக்கிரமே தேர்வு மையத்திற்குச் சென்றுவிடுங்கள். அப்போது தான் கடைசி நேர பதட்டத்தை தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்: NEET 2023: ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ… நீட் தேர்வர்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் இவை!

தேர்வு மையத்தில் மதியம் 12 மணியிலிருந்தே தேர்வர்களுக்கான செயல்முறையை தொடங்கி விடுவார்கள். உங்களது ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையை சரிபார்ப்பது, உங்களை சோதனையிடுவது போன்ற செயல்முறைகள் 12 மணி முதலே தொடங்கிவிடும். உங்களுக்கு 1.30 மணி வரை கால அவகாசம் இருந்தாலும், சீக்கிரம் சென்று விடுவது நல்லது. ஏனெனில் கடைசி நேரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நீங்கள் எழுத முடியாமல் போகலாம், அல்லது நீங்கள் பதற்றம் அடைந்து தேர்வை சரியாக எழுத முடியாமல் போகலாம்.

உங்களை 1.15 மணி முதலே உங்களுக்கான இருக்கையில் அமர அனுமதிப்பார்கள். 1.30 மணிக்குப் பிறகு உங்களுக்கான தேர்வு கூட அறிவுரைகள் வழங்கப்படும் மற்றும் சரிபார்ப்புகள் நடக்கும். 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், 15 நிமிடங்கள் முன்னதாக, அதாவது 1.45 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். மேலும், வினாத்தாள் நிரப்ப வேண்டியவை குறித்து அறை கண்காணிப்பாளர்கள் தேவையான அளவு அறிவுரைகள் வழங்கப்படும். உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும், நீங்கள் கண்காணிப்பாளர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

அடுத்ததாக தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட், புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். உங்களுடைய சரியான இருக்கையில் அமருங்கள். தண்ணீர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்வின்போது குடிக்க தண்ணீர் தேவைப்பட்டால் உள்ளேயே வழங்கப்படும். அடுத்து தேர்வில் நீங்கள் இரண்டு முறை வருகையை பதிவுச் செய்ய வேண்டும். தேர்வின் தொடக்கத்திலும், தேர்வு முடிந்தப் பிறகும் வருகை பதிவுச் செய்யப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment