தமிழகத்தின் அரசு பள்ளிகளில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்க்கை பெற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான (NEET UG) நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற மே 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள்: NEET UG 2023: நீட் தேர்வு தள்ளிப் போகுமா? காரணங்களை அடுக்கியபடி கோர்ட் படியேறிய மாணவர்கள்
இந்தநிலையில் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டை விட, இந்தாண்டு குறைவான அளவிலே அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கு கடந்தாண்டு 17,972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 12,840 பேர் தேர்வில் பங்கேற்றனர். ஆனால், இந்தாண்டு 14,000 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கிறது. இதுதவிர, அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil