Advertisment

NIRF Ranking: நீட் எழுதுறீங்களா? டாப் 10 மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் இதோ!

நீட் தேர்வு 2023; இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS

மருத்துவ படிப்பு

இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (MBBS) மற்றும் பல் அறுவை சிகிச்சை இளங்கலை (BDS) ஆகியவற்றில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2023 தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசை 2022ன் படி, இந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Advertisment

இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. NEET UG மூலம் MBBS மற்றும் BDS க்கான சேர்க்கை நீட் தேர்வு முடிவு, கல்லூரிகளின் தேர்வுகள் மற்றும் படிப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் கிடைக்கும் இடங்கள், இட ஒதுக்கீடு அளவுகோல்கள் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் கிடைக்கும். மொத்தம் 99,313 MBBS மற்றும் 26,949 BDS இடங்கள் NEET மூலம் நிரப்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்: NEET UG 2023: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; விண்ணப்பத்தில் தவறுகளை திருத்துவது எப்படி?

இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை நிரப்ப NBE ஆண்டுதோறும் NEET PG தேர்வை நடத்துகிறது. இந்தியாவில் சுமார் 42,182 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன.

இந்தியாவின் டாப் 10 மருத்துவக் கல்லூரிகள்

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டெல்லி (எய்ம்ஸ் டெல்லி)

முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர் (PGIMER சண்டிகர்)

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (CMC வேலூர்)

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், பெங்களூர் (நிம்ஹான்ஸ் பெங்களூர்)

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி (BHU வாரணாசி)

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி (ஜிப்மர் புதுச்சேரி)

சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், லக்னோ (SGPGIMS லக்னோ)

அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோவை

ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம் (ஸ்ரீ சித்ரா மருத்துவக் கல்லூரி)

கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிபால் (கே.எம்.சி மணிபால்)

NIRF தரவரிசை: இந்தியாவின் சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள்

சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை (சவீதா பல்கலைக்கழகம் சென்னை)

மணிபால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மணிபால்

டாக்டர் டி.ஒய் பாட்டீல் வித்யாபீடம், புனே

மௌலானா ஆசாத் பல் அறிவியல் நிறுவனம், டெல்லி

கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம், லக்னோ

ஏ.பி ஷெட்டி மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்சஸ், மங்களூரு

மணிபால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மங்களூர்

எஸ்.ஆர்.எம் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை

அரசு பல் மருத்துவக் கல்லூரி, நாக்பூர்

சிக்ஷா `ஓ` அனுசந்தன், புவனேஷ்வர்

NEET UG 2023: MBBS, BDS சேர்க்கை அளவுகோல்கள்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்ப தனித்தனி அளவுகோல் உள்ளது, இருப்பினும் விண்ணப்பதாரர்கள் NEET UG 2023 மற்றும் இந்தியாவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற பொது அளவுகோல்களுக்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் MBBS படிப்புகளில் சேருவதற்கு NEET UG தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் NEET UG தேர்வில் கலந்து கொள்ளாமல் MBBS படிப்பிற்கு நேரடியாக சேர்க்கை பெற முடியாது.

எய்ம்ஸ் நிறுவனங்களில் 1,899 MBBS இடங்களுக்கும், ஜிப்மரில் 249 இடங்களுக்கும் நீட் யுஜி தேர்வு மூலம் சேர்க்கை வழங்கப்படுகிறது. மொத்தம் 654 மருத்துவக் கல்லூரிகள், 15 AIIMS மற்றும் 2 JIPMER நிறுவனங்கள் NEET UG முடிவுகளின் அடிப்படையில் MBBS சேர்க்கையை அனுமதிக்கின்றன.

பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும், SC, ST மற்றும் OBC மாணவர்கள் MBBS சேர்க்கைக்கு குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் MBBS சேர்க்கை பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 வயதிலிருந்து அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment