NEET UG 2023: இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG 2023 முடிவுகள் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டன, தகுதி பெற்றவர்கள் கவுன்சிலிங் செயல்முறைக்கு தயாராகி வருகின்றனர்.
பொதுப் பிரிவினருக்கான நீட் கட்-ஆஃப் 2023 720-137 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 715-117 ஆக இருந்தது. சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் மாநில வாரியான பட்டியல் இங்கே
இதையும் படியுங்கள்: NEET Counselling: தமிழ்நாடு நீட் கவுன்சிலிங் செயல்முறை என்ன? டாப் மருத்துவக் கல்லூரிகள் எவை?
கர்நாடக MBBS சேர்க்கை - சிறந்த மருத்துவக் கல்லூரிகள்
NIRF தரவரிசை 2023 | மருத்துவக் கல்லூரியின் பெயர் |
ரேங்க் 4 | நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் & நியூரோ சயின்சஸ், பெங்களூர் |
ரேங்க் 9 | கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பால் |
ரேங்க் 19 | செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு |
ரேங்க் 30 | கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மங்களூர் |
ரேங்க் 37 | JSS மருத்துவக் கல்லூரி, மைசூர் |
ரேங்க் 43 | எம்.எஸ். ராமையா மருத்துவக் கல்லூரி, பெங்களூரு |
கர்நாடக எம்.பி.பி.எஸ் சேர்க்கை செயல்முறை
கவுன்சிலிங்கின் போது, கர்நாடகா மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான படிப்புகள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்கப்படுவார்கள். முழுமையான சேர்க்கை செயல்முறையை கீழே பார்க்கவும்.
- கர்நாடக எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து ஆவணச் சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்த வேண்டும்.
- கர்நாடக எம்.பி.பி.எஸ் தகுதிப் பட்டியல் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, பதிவு அடிப்படையில் வெளியிடப்படும்.
- மாநில தகுதிப் பட்டியலின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ் படிப்புகளில் 85% மாநில ஒதுக்கீடு மற்றும் 100% தனியார் கல்லூரி இடங்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும்.
- கவுன்சிலிங்கின் போது, கர்நாடகா மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான படிப்புகள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்கப்படுவார்கள்.
- ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அசல் ஆவணங்களுடன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியில் சேர்க்கை பெற வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.