scorecardresearch

தமிழ்நாடு டாப் 8 மருத்துவக் கல்லூரிகள் இவைதான்; எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நடைமுறை என்ன?

NEET UG 2023: மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) தமிழ்நாட்டில் கவுன்சிலிங் மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைகளை நடத்துகிறது.

NEET-UG 2023 MBBS admission criteria in top Tamil Nadu medical colleges
தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளது.

NEET UG 2023: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (UG) 2023 மே 7 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் NEET கவுன்சிலிங்கிற்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.

மருத்துவக் கல்வி இயக்குனரகம் (டிஎம்இ) நீட்-யுஜி மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தும் பொறுப்பு வகிக்கிறது.
தமிழகத்தில் 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கான நீட் கலந்தாய்வு நடத்தப்படும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கை செயல்முறை மற்றும் NIRF தரவரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சேர்க்கை செயல்முறை

தமிழ்நாடு மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.
கவுன்சிலிங்கின் போது, மாணவர்கள் கல்லூரிகள் மற்றும் படிப்புகளின் விருப்பங்களைச் சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள்.
விருப்பங்கள் கள், மாநில தகுதி ரேங்க், நீட் மதிப்பெண், இட ஒதுக்கீடு மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில், தகுதியான வேட்பாளர்களுக்கு இடங்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு சுற்று கவுன்சிலிங்கிற்குப் பிறகும் தமிழ்நாடு நீட் இட ஒதுக்கீடு பட்டியலை அதிகாரிகள் வெளியிடுவார்கள்.
இட ஒதுக்கீடு பெறப்படும் மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை முடிக்க ஒதுக்கப்பட்ட நிறுவனத்திற்கு அறிக்கை செய்ய வேண்டும்.

சிறந்த மருத்துவக் கல்லூரிகள்

கல்லூரிகள்2022 Nirf ரேங்கிங்
Christian Medical College, Vellore3
Amrita Vishwa Vidyapeetham8
Madras Medical College & Government General Hospital, Chennai
12
Sri Ramachandra Institute of Higher Education and Research
15
S.R.M. Institute of Science and Technology
20
Saveetha Institute of Medical and Technical Sciences
25
PSG Institute of Medical Sciences & Research, Coimbatore
35
Chettinad Academy of Research and Education
39
சிறந்த மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாடு அரசு NEET UG க்கு கல்லூரி வாரியான தகுதிப் பட்டியலை வெளியிடுவது இல்லை. மாறாக அது விண்ணப்பதாரர்களின் பெயர் வாரியான தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது.

மேலும் தரவரிசைப் பட்டியலில், வேட்பாளரின் பெயர், NEET UG பட்டியல் எண், NEET மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் போர்ட்டல் மூலம் தற்காலிக ஒதுக்கீடு ஆர்டர்கள் வழங்கப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Neet ug 2023 mbbs admission criteria in top tamil nadu medical colleges

Best of Express