scorecardresearch

உக்ரைனில் மருத்துவ படிப்பு; தகுதி, கல்விக் கட்டணம், கல்லூரிகள் உள்ளிட்ட முழு தகவல்கள் இங்கே

உக்ரைனில் MBBS படிக்க வேண்டுமா? விண்ணப்பிக்கும் முன், சேர்க்கை செயல்முறை, தகுதிக்கான அளவுகோல்கள், சிறந்த கல்லூரிகளின் பட்டியல் மற்றும் முக்கிய ஆவணங்களை அறிந்து கொள்ளுங்கள்

உக்ரைனில் மருத்துவ படிப்பு; தகுதி, கல்விக் கட்டணம், கல்லூரிகள் உள்ளிட்ட முழு தகவல்கள் இங்கே
உக்ரைனில் மருத்துவ படிப்பு தொடர்பான முழு தகவல்கள் (பிரதிநிதித்துவ படம்)

NEET UG 2023: வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான மிகவும் பிரபலமான இடமாக உக்ரைன் உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக, போர் தொடங்கியபோது அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால், நாட்டில் உள்ள மொத்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு உக்ரைனில் இருந்து 15,783 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

NBE வழங்கிய தகவலின்படி, 4311 விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் (FMGE) கலந்துக் கொண்டனர், அவர்களில் 1123 பேர் 2021 இல் தேர்ச்சி பெற்றனர்.

இதையும் படியுங்கள்: NEET UG 2023: நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? நீங்கள் தவிர்க்க முக்கிய விஷயங்கள் இங்கே

அதிகாரப்பூர்வ அரசு இணையதளம் http://studyinukraine.gov.ua/en/

தகுதி

நீட் தகுதி மதிப்பெண்

– விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

– அவர்கள் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

– 10 அல்லது 11 வருடங்கள் படித்த பள்ளிச் சான்றிதழைக் கொண்ட மாணவர்கள் ஒரு வருட ஆயத்தப் படிப்பை (முன் மருத்துவத் திட்டம்) படிக்க வேண்டும்.

பாட அமைப்பு

ஒடெசா தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் வேறு சில பல்கலைக்கழகங்களின்படி, உக்ரைனில் மருத்துவப் படிப்பு 6 ஆண்டுகள் ஆகும், இது மொத்தம் 13,474 மணிநேர பயிற்சி:

– மனிதாபிமான பாடங்கள் – 1,576 மணிநேரம்

-சமூக-பொருளாதார பாடங்கள் – 432 மணிநேரம்

-அடிப்படை / பொது அறிவியல் பாடங்கள் – 2,180 மணிநேரம்

-தொழில் சார்ந்த பாடங்கள் – 6,098 மணிநேரம்

-தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் – 324 மணிநேரம்

-செய்முறை பயிற்சி – 972 மணி நேரம்

– துணை மருத்துவ பயிற்சி / 6-வது ஆண்டில் – 1,892 மணிநேரம்

ஏறக்குறைய மற்ற எல்லா மருத்துவ நிறுவனங்களும் இதே பாட அமைப்பைப் பின்பற்றுகின்றன. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பாடநெறி அமைப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சேர்க்கை செயல்முறை

வெளிநாட்டு மாணவர்கள் கல்வி செமஸ்டருக்கு முன்பும் தொடக்கத்திலும் ஜூனியர் இளங்கலை, இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க, மாணவர்கள் தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகம்/ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு, அந்த பல்கலைக்கழகத்தின் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பிறகு, அவர்களின் அடையாளம் மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றாக தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள்.

அனைத்து ஆவணங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை சரிப்பார்ப்பு செய்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு கடிதங்கள், சேர்க்கை கடிதங்கள் மற்றும் விசா ஆதரவு கடிதங்களை கூரியர் அல்லது அஞ்சல் மூலம் பல்கலைக்கழகங்கள் அனுப்பும்.

தேவையான ஆவணங்கள்

அழைப்புக் கடிதத்தைப் பெற, பின்வரும் ஆவணங்கள் தேவை:

– பாஸ்போர்ட்டின் நகல்

– பள்ளி படிப்பு சான்றிதழ்களின் நகல்கள்

– பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்

– MBBS/MD சான்றிதழின் நகல் (முதுகலை மாணவர்களுக்கு மட்டும்)

– அழைப்பிதழ், கூரியர் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் ஆவணங்களை அனுப்பலாம் மற்றும் வங்கி பரிமாற்றம் அல்லது வெஸ்டர்ன் யூனியன் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.

கல்வி கட்டணம்

ஆங்கில வழிக் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் வருடத்திற்கு தோராயமாக 3500 அமெரிக்க டாலர்கள் (ரூ. 2,89,700) ஆகும், அதே சமயம் ரஷ்ய மொழியின் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 2500 அமெரிக்க டாலர்கள் (ரூ. 2,06,929).

கல்விக் கட்டணத்தைத் தவிர, ஆங்கில வழியில் மருத்துவ படிப்பில் சேரப் போகும் மாணவர்களுக்கு தங்குமிடக் கட்டணங்கள் தோராயமாக $1200.

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள்

உக்ரைனில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் சில பிரபலமானவை ஒடெசா தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், புகோவினியன் மாநில மருத்துவ பல்கலைக்கழகம், கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், லுகான்ஸ்க் மாநில மருத்துவ பல்கலைக்கழகம், வி.என். கராசின் கார்கிவ் நேஷனல் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின், மெடிக்கல் அகாடமி வெர்னாட்ஸ்கி சிஃபுவின் எஸ்.ஐ. ஜார்ஜீவ்ஸ்கியின் பெயரிடப்பட்டது, ஜபோரிஜியா மாநில மருத்துவ பல்கலைக்கழகம், ஜாபோரோஷியா மாநில மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் பல.

பயிற்று மொழி

முக்கியமாக உக்ரைனில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் மூன்று மொழிகளில் மருத்துவப் படிப்பு வழங்குகிறது: உக்ரைனியன், ஆங்கிலம் மற்றும் ரஷ்யன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Neet ug 2023 mbbs from ukraine check eligibility fees colleges scholarships