உஸ்பெகிஸ்தானில் மருத்துவக் கல்வியைப் படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்களுக்கு உதவ உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகமும் TMA பல்கலைக்கழகமும் இணைந்து கட்டணமில்லா ஹெல்ப்லைனையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் தொடங்கியுள்ளன.
அதிகாரப்பூர்வ இணையதளம் studyinuzbek.uz மற்றும் கட்டணமில்லா உதவி எண் 1800-123-2931. இந்த இணையதளத்தில் படிப்புகள், பல்கலைக்கழகங்கள், உதவித்தொகை, செயல்முறை மற்றும் படிப்பு விசாவிற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளன.
இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் எம்.பி.பி.எஸ் படிப்பு; தகுதி, கட்டணம் உள்பட முழுவிவரம் இங்கே
இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையே மாணவர் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவர்களின் பரிமாற்றத்தை எளிதாக்கும். கூட்டு ஆராய்ச்சி மையங்களை நிறுவுதல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களின் பரிமாற்றம் ஆகியவற்றை இது வழங்கும்.
கடந்த ஆண்டு, Uzbekistan's Medical Higher Educational Institutes (MHEIs) முந்தைய MCI மற்றும் NMC விதிமுறைகளை (ஸ்கிரீனிங் சோதனை விதிமுறைகள் 2002) மற்றும் (வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி உரிமம் - FM2021) ஏற்றுக்கொண்டு, 2000 இடங்களை உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வழங்கியது.
உஸ்பெகிஸ்தான் இந்திய மாணவர்களுக்கு இரண்டு இளங்கலை மருத்துவ திட்டங்களை வழங்குகிறது: 6 வருட MD டிப்ளமோ மற்றும் 5+1 வருட MBBS பட்டம் மற்றும் ஒரு வருட இன்டர்ன்ஷிப்.
கூடுதலாக, உஸ்பெகிஸ்தான் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி பயில உஸ்பெகிஸ்தான் உதவித்தொகை வழங்குகிறது. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil