Advertisment

எம்.பி.பி.எஸ் படிப்பை 9 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்; தேசிய மருத்துவ ஆணையம்

எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் சேர்க்கைப் பெற்ற நாளில் இருந்து 9 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும்; தேசிய மருத்துவ ஆணையம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mbbs

மருத்துவ கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்கள், சேர்க்கை பெற்ற நாளிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். முதல் ஆண்டு தேர்ச்சி பெற நான்கு முயற்சிகள் மட்டுமே கிடைக்கும் என்று சுற்றறிக்கை கூறுகிறது.

Advertisment

மேலும், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) நீட் தேர்வு (NEET-UG) தகுதிப் பட்டியலின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் பட்டதாரி படிப்புகளுக்கான சேர்க்கைக்கு பொதுவான கவுன்சிலிங் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு ஒரே கவுன்சலிங்; தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை

"எந்தச் சூழ்நிலையிலும், மாணவர் முதல் வருடத்திற்கு (MBBS) நான்கு முயற்சிகளுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் படிப்பில் சேர்க்கை பெற்ற நாளிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு எந்த ஒரு மாணவரும் இளங்கலை மருத்துவப் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று என்.எம்.சி. ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பட்டதாரி மருத்துவக் கல்வித் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட மாணவர், கட்டாய சுழலும் மருத்துவப் பயிற்சி விதிமுறைகள், 2021-ன்படி, சுழலும் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் வரை, பட்டப்படிப்பை முடித்தவராகக் கருதப்படமாட்டார்.

"தேசிய மருத்துவ ஆணையத்தின் தற்போதைய விதிமுறைகள் அல்லது பிற விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள எதற்கும் பாரபட்சம் இல்லாமல், நீட் தேர்வின் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் மருத்துவத்தில் பட்டதாரி படிப்புகளில் சேர்க்கைக்கு பொதுவான கவுன்சிலிங் இருக்கும்" என்று அரசிதழ் அறிவிப்பு கூறுகிறது. கவுன்சிலிங் முற்றிலும் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய இருக்கை மேட்ரிக்ஸை அடிப்படையாகக் கொண்டது, பொதுவான கவுன்சிலிங்கில் பல சுற்றுகள் தேவைப்படலாம் என அறிவிப்பு கூறியது.

கீழ்நிலை மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) பொதுவான கவுன்சிலிங் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடும், மேலும் கீழே உள்ள பிரிவு 17 இன் கீழ் நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பு வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க கவுன்சிலிங்கை நடத்தும்.

கவுன்சிலிங்கிற்கு அரசு ஒரு நியமிக்கப்பட்ட அதிகாரியை நியமித்து, அனைத்து இளங்கலை இடங்களுக்கும் அதன் நிறுவனம் மற்றும் முறையை முடிவு செய்து அறிவிக்கும்.

இந்த விதிமுறைகளை மீறி எந்த மருத்துவ நிறுவனமும் பட்டதாரி மருத்துவக் கல்வி (ஜி.எம்.இ) படிப்பிற்கு எந்த ஒரு விண்ணப்பதாரரையும் அனுமதிக்கக் கூடாது என்று விதிமுறைகள் கூறுகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment