Advertisment

NEET UG: நீட் தேர்வில் இயற்பியல், வேதியியலுக்கு முன்னுரிமை; டை பிரேக்கிங் விதிகளில் புதிய மாற்றங்கள்!

நீட் தேர்வு; உயிரியலை விட இயற்பியல், வேதியியலுக்கு முன்னுரிமை; டை பிரேக்கிங் விதிகளின் புதிய மாற்றங்கள் இவை தான்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET exam students

நீட் தேர்வு

NEET UG 2023: தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) ஒரே மதிப்பெண்ணைக் கொண்ட விண்ணப்பதாரர்களின் தரவரிசைகளை நிர்ணயம் செய்வதற்கான செயல்முறையைத் திருத்தும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, இயற்பியலில் பெற்ற மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அதைத் தொடர்ந்து வேதியியல் மற்றும் உயிரியல் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உயிரியலில் பெற்ற மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, அதைத் தொடர்ந்து வேதியியல் மற்றும் இயற்பியலுக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய நடைமுறையைப் போல் இது இல்லை.

Advertisment

ஜூன் 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை அறிவிப்பின்படி, “நீட் தேர்வில் டை-பிரேக்கிங் செய்ய வேண்டி, மாணவர்களின் மதிப்பெண்கள் ஒரே மாதிரியாக இருந்தால், இயற்பியலில் பெற்ற மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, அதனைத் தொடர்ந்து வேதியியல் மற்றும் உயிரியல் மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும். அப்படியும் சமன் தொடர்ந்தால், கணினியைப் பயன்படுத்தி ரேண்டம் ஆக தேர்வு செய்யப்படும், இது மனித தலையீடு இல்லாமல், தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்,” என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: NEET UG 2023 Result: நீட் தேர்வு முதல் 50 இடங்களில் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆதிக்கம்

இந்த ஆண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான விளக்கத்தையும் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது. அதில், “நீட் தேர்வு 2023 முடிவுகளில் “டை-பிரேக்கிங்கிற்கான மாணவர்களின் இடைநிலைத் தகுதியை” தீர்மானிப்பதற்கு முந்தைய நடைமுறைகள்/ விதிகள் (தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல் புல்லட்டின் படி) பின்பற்றப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள டை-பிரேக்கிங் விதிகள் பின்வரும் வரிசையில் உள்ளன:

- தேர்வில் உயிரியலில் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) அதிக மதிப்பெண்கள்/ சதவீத மதிப்பெண்களைப் பெறுபவர், அதைத் தொடர்ந்து,

- தேர்வில் வேதியியலில் அதிக மதிப்பெண்கள்/ சதவீத மதிப்பெண்களைப் பெறுபவர், அதைத் தொடர்ந்து

- தேர்வில் இயற்பியலில் அதிக மதிப்பெண்கள்/ சதவீத மதிப்பெண்களைப் பெறுபவர், அதைத் தொடர்ந்து,

- தேர்வில் அனைத்து பாடங்களிலும் சரியான விடைகளை விட குறைவான தவறான பதில்களைக் கொண்ட மாணவர், தொடர்ந்து

- உயிரியலில் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) சரியான பதில்களுக்கு மிகக் குறைந்த விகிதத்தில் தவறான பதில்களைக் கொண்ட மாணவர், தொடர்ந்து

- வேதியியலில் சரியான பதில்களுக்கு மிகக் குறைந்த விகிதத்தில் தவறான பதில்களைக் கொண்ட மாணவர், தொடர்ந்து

- இயற்பியலில் சரியான பதில்களுக்கு மிகக் குறைந்த விகிதத்தில் தவறான பதில்களைக் கொண்ட மாணவர்,

டை-பிரேக்கிங்கிற்கான புதிய விதிமுறைகள் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையை பாதிக்காது. NEET UG 2023 முடிவுகள் ஜூன் 13 அன்று அறிவிக்கப்பட்டன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment