Advertisment

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு ஒரே கவுன்சலிங்; தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை

நீட் தகுதி அடிப்படையில் இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு ஒரே கவுன்சலிங்; தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை

author-image
WebDesk
New Update
counselling

கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அதன் புதிய விதிமுறைகளில் இளங்கலை நீட் தேர்வு (NEET-UG) தகுதிப் பட்டியலின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் பட்டதாரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொதுவான கவுன்சிலிங்கை முன்மொழிந்துள்ளது.

Advertisment

இந்த புதிய விதிமுறைகள் பட்டதாரி மருத்துவக் கல்வி விதிமுறைகள், 2023 அல்லது GMER-23 என அழைக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: இந்தியாவில் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள்; 8195 எம்.பி.பி.எஸ் இடங்களும் புதிதாக சேர்ப்பு

"தேசிய மருத்துவ ஆணையத்தின் தற்போதைய விதிமுறைகள் அல்லது பிற விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள எதற்கும் பாரபட்சம் இல்லாமல், நீட் தேர்வு தகுதிப் பட்டியலின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் மருத்துவத்தில் பட்டதாரி படிப்புகளில் சேர்க்கைக்கு பொதுவான கவுன்சிலிங் இருக்கும்" என்று ஜூன் 2 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசிதழில் NMC தெரிவித்துள்ளது.

கவுன்சிலிங் முற்றிலும் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய இருக்கை ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டது, பொதுவான கவுன்சிலிங்கில் பல சுற்றுகள் தேவைப்படலாம் என அறிவிப்பு கூறியது.

கீழ்நிலை மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) பொதுவான கவுன்சிலிங் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடும், மேலும் கீழே உள்ள பிரிவு 17 இன் கீழ் நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பு வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க கவுன்சிலிங்கை நடத்தும்.

கவுன்சிலிங்கிற்கு அரசு ஒரு நியமிக்கப்பட்ட அதிகாரியை நியமித்து, அனைத்து இளங்கலை இடங்களுக்கும் அதன் நிறுவனம் மற்றும் முறையை முடிவு செய்து அறிவிக்கும்.

இந்த விதிமுறைகளை மீறி எந்த மருத்துவ நிறுவனமும் பட்டதாரி மருத்துவக் கல்வி (ஜி.எம்.இ) படிப்பிற்கு எந்த ஒரு விண்ணப்பதாரரையும் அனுமதிக்கக் கூடாது என்று விதிமுறைகள் கூறுகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment