Advertisment

NEET UG 2023: நீட் தேர்வு ரிசல்ட் எப்போது? கட் ஆஃப் எப்படி இருக்கும்?

NEET UG 2023: நீட் ரிசல்ட் தேதி, எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மற்றும் கவுன்சிலிங் அட்டவணை; முழு விவரம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET results

NEET UG 2023: (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - அருள் ஹாரிசன்)

NEET UG 2023: இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG 2023 முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் அறிவிக்க உள்ளது. நீட் தேர்வு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 499 நகரங்களில் 4,097 மையங்களில் நடத்தப்பட்டது. நீட் தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் காணலாம்.

Advertisment

நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது மற்றும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 6 ஆம் தேதி இரவு 11:50 மணி வரை ஆட்சேபனை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். விடை குறிப்பு சவால்களை எழுப்ப, மாணவர்கள் ஒரு கேள்விக்கு 200 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்: Dental Colleges NIRF Ranking: முதல் இடத்தில் சென்னை சவீதா கல்லூரி; டாப் 10-ல் 3 தமிழக கல்லூரிகளுக்கு இடம்

நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற தகவலின்படி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG 2023 இன் முடிவுகள் தேசிய தேர்வு முகமையால் (NTA) அடுத்த வாரத்தில் வெளியிடப்படும். அதாவது ஜூன் இரண்டாவது வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை நாடாளுமன்றக் குழுவிடம் உறுதியளித்தது.

இந்தியாவின் சிறந்த எம்.பி.பி.எஸ் (MBBS) கல்லூரிகள் எவை?

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2023 இல் இந்தியாவின் சிறந்த மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருந்தியல் கல்லூரிகளின் பட்டியலை கல்வி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. பட்டியலின்படி, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), புது தில்லி இந்தியாவில் உள்ள அனைத்து MBBS/ மருத்துவக் கல்லூரிகளில் முதலிடத்தில் உள்ளது. எய்ம்ஸ் டெல்லி அனைத்து கல்லூரிகளிலும் ஒட்டுமொத்தப் பிரிவில் ஆறாவது இடத்தைப் பிடித்தது.

முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER), சண்டிகர் இரண்டாம் இடத்தையும், வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மூன்றாவது இடத்தையும், தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்), பெங்களூரு நான்காவது இடத்தையும், ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), புதுச்சேரி ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.

பல் மருத்துவக் கல்லூரிகளில் சென்னையின் சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் முதலிடத்தையும், மணிபால் பல் மருத்துவ அறிவியல் கல்லூரி, மணிபால் மற்றும் டாக்டர் டி.ஒய் பாட்டீல் வித்யாபீடம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையும் பிடித்தன.

சிறந்த மருந்தியல் கல்லூரிகள் பட்டியலில் ஹைதராபாத் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதலிடத்தையும், டெல்லியின் ஜாமியா ஹம்தார்ட் இரண்டாவது இடத்தையும், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், பிலானி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

நீட் தேர்வுக்கான கட்-ஆஃப் என்னவாக இருக்கும்?

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து கல்லூரிகளுக்கான கட்-ஆஃப் வெளியிடப்படும்.

வித்யாமந்திர் வகுப்புகளின் முதன்மை கல்வி அதிகாரி சவுரப் குமார் கருத்துப்படி, பொதுப் பிரிவினருக்கு 710 முதல் 124 வரையிலும், ஓ.பி.சி.,க்கு 130 முதல் 98 வரையிலும், எஸ்.சிக்கு 120 முதல் 95 வரையிலும், எஸ்.டிக்கு 118 - 92 வரையிலும் கட் ஆஃப் இருக்கும்.

ஆகாஷ் BUJU இன் துணை மண்டல இயக்குநர் சர்வேஷ் சௌபேயின் கூற்றுப்படி, பொதுப் பிரிவினருக்கு 716 முதல் 120 வரையிலும், OBC, SC மற்றும் ST பிரிவினருக்கு 119 முதல் 95 வரையிலும் இருக்கும்.

2022 ஆம் ஆண்டில், பொதுப் பிரிவினருக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண்கள் 715 முதல் 117 மதிப்பெண்களாகவும், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு 116 முதல் 93 மதிப்பெண்களாகவும், இருந்தது. மாற்றுத் திறனாளிகளில் பொது பிரிவினருக்கு 116 முதல் 105 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சிக்கு 104 முதல் 93 வரையிலும் இருந்தது.

நீட் தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்துக் கொள்வது?

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — https://neet.nta.nic.in/

படி 2: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்

படி 3: விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் சான்றுகளை உள்ளிடவும்

படி 4: முடிவுகளைப் பார்த்து பதிவிறக்கவும்

நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்ன நடக்கும்?

வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, இளங்கலை மருத்துவ / பல் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை மருத்துவ ஆலோசனைக் குழு / மருத்துவ சேவைகள் பொது இயக்குநரகம் நடத்துகிறது. MCC AFMCக்கான பதிவை மட்டுமே செய்கிறது மற்றும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவை AFMC அதிகாரிகளுக்கு சேர்க்கை செயல்முறைக்கு அனுப்புகிறது. DU/BHU மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் தங்களால் வழங்கப்படும் பிற தொடர்புடைய படிப்புகளுக்கு நீட் மதிப்பெண்ணைப் பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment