/tamil-ie/media/media_files/uploads/2023/04/NEET-exam-city.jpg)
மருத்துவ மாணவர்கள் (பிரதிநிதித்துவ படம்)
NEET UG 2023: தேசிய தேர்வு முகமை (NTA) இன்று இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG) நகர அறிவிப்புச் சீட்டை வெளியிடுகிறது. பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ NTA NEET இணையதளத்தில் தங்கள் தேர்வு மையங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ NTA அட்டவணையின்படி, நீட் தேர்வு மே 7 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடத்தப்படும்.
இதையும் படியுங்கள்: NEET UG 2023; நீட் தேர்வு வேதியியல் பிரிவில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
NEET தேர்வு 2023: நகரத் தகவல் சீட்டை எப்போது, எங்கு தெரிந்துக் கொள்வது என்பது இங்கே
விண்ணப்பதாரர்கள் இப்போது NTA NEET அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.neet.nta.nic.in அல்லது www.nta.ac.in இல் தங்கள் தேர்வு மைய நகர தகவலை தெரிந்துக் கொள்ளலாம்.
நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீட்டு தேதி தேசிய தேர்வு முகமையால் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கடந்தகால போக்குகளின்படி, தேர்வுக்கு 6 முதல் 7 நாட்களுக்கு முன்பு அனுமதி அட்டை வெளியிடப்படும். 2022ல் நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற்றது, அதற்கான ஹால் டிக்கெட் ஜூலை 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல், 2021ல் அட்மிட் கார்டு செப்டம்பர் 6ம் தேதி வெளியிடப்பட்டு, நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடத்தப்பட்டது.
தேர்வு தேதி மற்றும் முந்தைய அட்டவணையின்படி, தேசிய தேர்வு முகமை விரைவில் நகரத் தகவல் சீட்டை முதலில் வெளியிடும்.
இந்த நகரச் சீட்டில் தேர்வு மையம் இருக்கும் நகரத்தைப் பற்றி தேர்வர்கள் தெரிவிக்கும் நகரத் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த ஆண்டு, நீட் தேர்வு நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் நடத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.