NEET UG 2023 தேர்வு முடிவுகள்: தேசிய தேர்வு முகமை (NTA) இன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG 2023க்கான முடிவுகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://neet.nta.nic.in/ இல் சரிபார்க்கலாம்
தேசிய தேர்வு முகமை சமீபத்தில் ஜூன் 6 அன்று மணிப்பூர் மாநிலம் மற்றும் 10 நகரங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டது. ஜூன் 12 ஆம் தேதி மாலை 4 மணி வரை விடைத்தாள்களுக்கு எதிரான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: NEET UG Results Date 2023: இந்த தேதியில் ரெடியா இருங்க மக்களே… நீட் ரிசல்ட் தேதி முக்கிய அப்டேட்
இந்தநிலையில், "தேசிய தேர்வு முகமை இன்று இரவு 10 மணிக்கு முடிவுகளை வெளியிட முயற்சிக்கிறது. முடிவுகள் குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது" என்று தேசிய தேர்வு முகமை அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
நீட் முடிவு அறிவிக்கப்பட்டவுடன், தகுதியான விண்ணப்பதாரர்கள் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (எம்சிசி) நடத்தும் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அந்தந்த மாநில ஆணையத்தால் நடத்தப்படும் 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மையப்படுத்தப்பட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.
NEET UG 2023 தேர்வு முடிவுகள்: மதிப்பெண் அட்டைகளை எவ்வாறு சரிபார்க்கலாம்?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - https://neet.nta.nic.in/
படி 2: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்
படி 3: விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் சான்றுகளை உள்ளிடவும்
படி 4: எதிர்கால குறிப்புக்காக முடிவுகளைப் பார்த்து பதிவிறக்கவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil