தேசிய தேர்வு முகமை (NTA) ஜூன் 15 அல்லது 16 ஆம் தேதி நீட் தேர்வு (NEET UG 2023) முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
நீட் தேர்வு மே 7 அன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் அமைந்துள்ள 4,097 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. நீட் தேர்வில் மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 449 பேர் தேர்வெழுதினர்.
இதையும் படியுங்கள்: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு ஒரே கவுன்சலிங்; தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை
தேசிய தேர்வு முகமை ஜூன் 5 அன்று நீட் தேர்வுக்கான விடைக் குறிப்புகளை வெளியிட்டது. தற்காலிக விடைக்குறிப்பில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள் ஜூன் 6 ஆம் தேதி வரை அதற்கு எதிராக ஏதேனும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட சவால்களை ஆய்வு செய்த பின் இறுதி விடைக்குறிப்பு மற்றும் முடிவுகளை தேசிய தேர்வு முகமை அறிவிக்க உள்ளது.
ரிசல்ட் அறிவிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் நீட் முடிவை சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.
நீட் தேர்வு முடிவை சரிபார்ப்பது எப்படி?
படி 1. https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
படி 2. முகப்புப் பக்கத்தில், NEET UG 2023 முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3. ஒரு புதிய பக்கம் தோன்றும், உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
படி 4. உங்கள் NEET UG முடிவு திரையில் காட்டப்படும்
படி 5. பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்
கடந்த ஆண்டு, மொத்தம் 18,72,343 விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர், அவர்களில் 17,64,571 பேர் தேர்வெழுதினர். இதில் 9,93,069 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 56.27%.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil