செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீட் தேர்வு (NEET-UG) முடிவுகளில் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இரண்டு மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். ஒருவர் தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் ஜே, மற்றொருவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி. சுவாரஸ்யமாக, கடந்த ஆண்டு, 99.9997733 சதவீத மதிப்பெண்ணை நான்கு பேர் பெற்றிருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தனித்தனி ரேங்க் வழங்கப்பட்டது. அப்படியானால், தேசிய தேர்வு முகமை (NTA) இந்த ஆண்டு இருவருக்கும் முதலிடத்தை அறிவித்ததற்கு என்ன காரணம்?
இதையும் படியுங்கள்: NEET UG 2023: நீட் தேர்வுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு; இதுவரை இல்லாத அளவில் முதல் 50 ரேங்கில் அதிக இடங்களைப் பிடித்து சாதனை
தேசிய தேர்வு முகமை பயன்படுத்திய டை-பிரேக்கிங் விதிகளில் இதற்கான பதில் உள்ளது. இந்த ஆண்டு, தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு சூத்திரத்திலிருந்து இரண்டு காரணிகளை விலக்கியுள்ளது. 2022 இல், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சமமான மதிப்பெண்கள்/ சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனிப்பட்ட தரவரிசையை ஒதுக்க பின்வரும் ஒன்பது காரணிகளைப் பயன்படுத்தப்பட்டது:
அ. உயிரியலில் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) அதிக மதிப்பெண்கள்/ சதவிகிதங்களைப் பெற்ற மாணவர், தொடர்ந்து
ஆ. வேதியியலில் அதிக மதிப்பெண்கள்/ சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவர், தொடர்ந்து
இ. தேர்வில் இயற்பியலில் அதிக மதிப்பெண்கள்/ சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவர், தொடர்ந்து
ஈ. தேர்வில் அனைத்து பாடங்களிலும் சரியான விடைகளை விட குறைவான தவறான பதில்களைக் கொண்ட மாணவர், தொடர்ந்து
உ. உயிரியலில் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) சரியான பதில்களுக்கு மிகக் குறைந்த விகிதத்தில் தவறான பதில்களைக் கொண்ட மாணவர், தொடர்ந்து
ஊ. வேதியியலில் சரியான பதில்களுக்கு மிகக் குறைந்த விகிதத்தில் தவறான பதில்களைக் கொண்ட மாணவர், தொடர்ந்து
எ. இயற்பியலில் சரியான பதில்களுக்கு மிகக் குறைந்த விகிதத்தில் தவறான பதில்களைக் கொண்ட மாணவர், தொடர்ந்து
ஏ. வயது அதிகம் உள்ள மாணவர், தொடர்ந்து
ஐ. நீட் விண்ணப்ப எண் ஏறுவரிசையில்
இந்த ஆண்டு, சூத்திரத்தில் வேட்பாளரின் வயது மற்றும் விண்ணப்ப எண் தொடர்பான புள்ளிகள் (ஏ) மற்றும் (ஐ) தேசிய தேர்வு முகமையால் தவிர்க்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு மாணவரின் வயது மற்றும் விண்ணப்ப எண் ஆகியவை சமமான அல்லது ஒரே மதிப்பெண்களைக் கொண்ட மாணவர்களுக்கு வெவ்வேறு தரவரிசைகளை நிர்ணயிப்பதில் காரணிகளாக இல்லை. அதாவது பிரபஞ்சன் ஜே மற்றும் போரா வருண் சக்ரவர்த்தி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் சூத்திரத்தின் புள்ளிகள் (அ) முதல் (ஐ) வரையிலான விதிகள் டை பிரேக்கிங் செய்ய போதுமானது என்பதை நிரூபித்தது.
"இருவரும் 720 மதிப்பெண்களுக்கு சரியான மதிப்பெண் எடுத்திருப்பதாலும், தவறான பதில்கள் இல்லாததாலும், சூத்திரத்தின் புள்ளிகள் (அ) முதல் (ஐ) வரையிலான விதிகள் எந்தப் பயனுள்ள பலன்களையும் தராததால், அவர்களுக்கிடையேயான சமநிலையை உடைக்க இயலாது" என்று தேசிய தேர்வு முகமை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், "எனவே, முழு ரேங்க் பட்டியலிலும் இரண்டு மாணவர்கள் மட்டுமே சமன் செய்யப்பட்டனர், அவர்கள் முழு மதிப்பெண் பெற்ற பிரபஞ்சன் ஜே மற்றும் போரா வருண் சக்ரவர்த்தி" என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டைப் போல, மாணவர்களின் வயது மற்றும் விண்ணப்ப எண்ணை ஏன் தேசிய தேர்வு முகமை தனது டை-பிரேக்கிங் பொறிமுறையில் சேர்க்கவில்லை என்று கேட்டபோது, “நாங்கள் பயன்படுத்திய சூத்திரம் இருவரைத் தவிர அனைவருக்கும் தனித்துவமான தரவரிசையை வழங்குவதை உறுதி செய்தது. அது சேர்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்காது. எனவே, முடிவுக் குழு (சுகாதார அமைச்சகத்தின் பிரதிநிதிகளுடன்) இருவரையும் கூட்டாக முதலிடம் பெற்றவராக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று நினைத்தது,” என்று அந்த அதிகாரி கூறினார்.
கடந்த ஆண்டு, 2021 இல் நடந்ததைத் தவிர்க்க 9 விதிமுறைகளுடன் டை-பிரேக்கிங் ஃபார்முலாவை தேசிய தேர்வு முகமை அறிமுகப்படுத்தியது. அந்த ஆண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபார்முலாவை மீறி முதல் மூன்று மாணவர்கள் சமநிலையில் இருந்தனர், எனவே அனைவருக்கும் ரேங்க் 1 வழங்கப்பட்டது.
1. தேர்வில் உயிரியலில் (தாவரவியல் & விலங்கியல்) அதிக மதிப்பெண்கள்/ சதவீத மதிப்பெண்களைப் பெறுபவர், அதைத் தொடர்ந்து,
2. தேர்வில் வேதியியலில் அதிக மதிப்பெண்கள்/ சதவீத மதிப்பெண்களைப் பெறுபவர், அதைத் தொடர்ந்து,
3. தேர்வில் உள்ள அனைத்துப் பாடங்களிலும் பல தவறான பதில்கள் மற்றும் சரியான பதில்களை குறைவான விகிதத்தில் கொண்ட மாணவர்
தேசிய தேர்வு முகமை அதிகாரியின் கூற்றுப்படி, கூட்டுத் தரவரிசைப் பெற்றவர்களைக் கொண்டிருப்பது உகந்த சூழ்நிலை அல்ல, குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் சூழலில் சரியானது அல்ல. எனவே, 2022 ஆம் ஆண்டில், தேசிய தேர்வு முகமை மேலே உள்ள சூத்திரத்தை ஒன்பது புள்ளிகளுடன் மாற்றியது. ஆனால் இந்த ஆண்டு, ஃபார்முலாவில் இருந்து வயது மற்றும் விண்ணப்ப எண்ணைக் குறைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.