கட்டுரையாளர் – சௌரப் குமார்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அல்லது NEET 2023 இந்த ஆண்டு மே 7 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) உறுதி செய்துள்ளது. கடும் போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் கடந்த ஆண்டு 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர், மேலும் 2023 தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தேர்வு எழுத உள்ள விண்ணப்பதாரர்கள் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் நல்ல தரவரிசையை அடைவதன் மூலம், மாணவர்கள் MBBS, BDS, AYUSH மற்றும் பிற நர்சிங் படிப்புகளை வழங்கும் நாட்டின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: உலகின் புத்திசாலி மாணவராக இந்திய- அமெரிக்க சிறுமி 2-ம் முறை அசத்தல்; சென்னையை பூர்வீகமாக கொண்டவர்
எந்தவொரு போட்டித் தேர்வுக்கும் தயாராவது, விண்ணப்பதாரர் காட்டும் ஒழுக்கத்தைப் பொறுத்தது. சரியான வழிகாட்டுதலுடன் ஒரு நல்ல உத்தியுடன், கூடுதல் மைல் செல்ல விரும்பும் எந்தவொரு விண்ணப்பதாரரும் நீட் தேர்வு 2023ல் வெற்றி பெறலாம்.
நீட் தேர்வு முறை
தேர்வு காலம் 3 மணி நேரம் 20 நிமிடங்களுடன் பேனா மற்றும் பேப்பர் முறையில் ஆஃப்லைனில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் வழங்கப்படும், அதில் அவர்கள் 180 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், மொத்த மதிப்பெண்கள் 720 ஆக இருக்கும்.
தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய மூன்று பாடங்களிலிருந்து வினாக்கள் இடம்பெறும். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்களைப் பெறுவார்கள், அதேநேரம் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 எதிர்மறை மதிப்பெண்ணை, அதாவது உங்கள் மதிப்பெண்ணில் 1 ஒன்று கழிக்கப்படும். இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளில் மொத்தம் 50 கேள்விகளும், உயிரியல் பிரிவில் மொத்தம் 100 கேள்விகளும் இருக்கும்.
நீட் தேர்வு பாடத்திட்டம்
இயற்பியல்
இயற்பியல் உலகம் மற்றும் அளவீடு, மின்னியல், இயக்கவியல், மின்னூட்டம், மின்னோட்டம் மற்றும் காந்தத்தின் காந்த விளைவுகள், வேலை, ஆற்றல் மற்றும் சக்தி, துகள்கள் மற்றும் திட பொருட்கள் அமைப்புகளின் இயக்கம், இயக்க விதிகள், மின்காந்த அலைகள், ஒளியியல், மின்காந்த தூண்டல் மற்றும் மாற்று மின்னோட்டங்கள், பொருளின் பண்புகள், பொருள் மற்றும் கதிர்வீச்சின் இரட்டை இயல்பு, ஈர்ப்பு, வெப்ப இயக்கவியல், அணுக்கள் மற்றும் உட்கரு, மின்னணு சாதனங்கள், அலைவுகள் மற்றும் அலை, மற்றும் வாயுக்கள் மற்றும் இயக்கக் கோட்பாடுகளின் பண்புகள்
வேதியியல்
வேதியியல், திட நிலை, அணுவின் அமைப்பு, நீர்மங்கள், மின் வேதியியல், வேதியியல் இயக்கவியல், பொருளின் நிலைகள்: வாயுக்கள் மற்றும் திரவங்கள், தனிமங்களின் வகைப்பாடு மற்றும் பண்புகளில் கால அளவு, வெப்ப இயக்கவியல், மேற்பரப்பு வேதியியல், தனிமங்களின் பொதுக் கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகள், சமநிலை, பி-பிளாக் தனிமங்கள், ரெடாக்ஸ் எதிர்வினைகள், வேதியியல் பிணைப்பு மற்றும் மூலக்கூறு அமைப்பு, டி- மற்றும் எஃப்-பிளாக் தனிமங்கள், ஹைட்ரஜன், ஒருங்கிணைப்பு கலவைகள், எஸ்-பிளாக் தனிமங்கள் (காரம் மற்றும் அல்கலைன் புவி உலோகங்கள்), ஆல்கஹால்கள், சில பி-பிளாக் தனிமங்கள், பீனால்கள், மற்றும் ஈதர்கள், கரிம வேதியியல் – சில அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் நுட்பங்கள், ஹாலோஅல்கேன்கள் மற்றும் ஹாலோரேன்கள், ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள், ஹைட்ரோகார்பன்கள், சுற்றுச்சூழல் வேதியியல், உயிர் அணுக்கள், பாலிமர்கள் மற்றும் வேதியியல், நைட்ரஜன் கொண்ட கரிம சேர்மங்கள்
உயிரியல்
வாழும் உலகில் உள்ள பன்முகத்தன்மை, மரபியல் மற்றும் பரிணாமம், செல் அமைப்பு மற்றும் செயல்பாடு, இனப்பெருக்கம், உயிரியல் மற்றும் மனித நலன், கட்டமைப்பு அமைப்பு - தாவரங்கள் மற்றும் விலங்குகள், தாவர உடலியல், மனித உடலியல், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள்
நீட் தேர்வுக்கு தயாராவது எப்படி?
1) கால அட்டவணையைத் தயாரித்தல் - தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால், விண்ணப்பதாரர்கள் அனைத்துப் பாடங்களுக்கும் சமமாக நேரத்தைப் பிரித்து (அல்லது அவர்கள் சிறப்பாகக் கருதும் வகையில்) கால அட்டவணையைத் தயாரிக்க வேண்டும். கால அட்டவணை, மாணவர்களின் வேகத்தைக் கண்காணிக்க உதவுவதோடு, சரியான நேரத்தில் தயாரிப்பை முடிக்க அவர்களுக்கு உதவும்.
2) பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வது மற்றும் NCERT புத்தகங்களில் முழு தெளிவு பெறுதல் – நீட் தேர்வில் உள்ள கேள்விகள் முக்கியமாக NCERT அடிப்படையிலானவை என்பதால், மாணவர்கள் ஒவ்வொரு தலைப்புக்கும் பின்னால் உள்ள அடிப்படைகளைப் புரிந்துகொண்டு NCERT புத்தகங்களை நன்றாக படித்து பயிற்சி பெற வேண்டும்.
3) கருத்தியல் தெளிவு முக்கியமானது - நீட் தேர்வில் தேர்ச்சி பெற, விண்ணப்பதாரர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் தலைப்புகளை தெளிவுடன் புரிந்து கொள்ள வேண்டும். பிற புத்தகங்களிலிருந்தும் பயிற்சி பெறுவது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
4) மாதிரித் தேர்வுகள் மூலம் உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள் - எந்தவொரு கடினமான நுழைவுத் தேர்விலும் மாதிரித் தேர்வுகள் முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும். மாதிரி தேர்வை எழுதுவது, விண்ணப்பதாரர் கவனம் செலுத்த வேண்டிய பலவீனங்களைக் கண்டறியும் அதே வேளையில் தன்னை மதிப்பீடு செய்துகொள்ளவும் உதவும்.
5) நிபுணத்துவ வழிகாட்டுதல் - மாணவர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து, அவர்களின் தயாரிப்பில் முன்னேற, நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெற வேண்டும்.
6) ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவது சிறந்த மூளைச் செயல்பாட்டிற்கு வழிவகுக்கும் - காலையில் மனித மூளை சிறப்பாகச் செயல்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், அதனால்தான் விண்ணப்பதாரர்கள் தங்கள் மூளைக்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கொடுக்க வேண்டும். இரவில் தாமதமாகப் படிக்காமல், அதிகாலையில் படிக்கத் தங்களை ஊக்குவிப்பதன் மூலம், விண்ணப்பதாரர்கள் தங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.
ஆர்வமுள்ளவரின் தரத்தை நிர்ணயிப்பதில் சரியான உத்தியும் பயனுள்ள நேர மேலாண்மையும் முக்கியம். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் தயாரிப்பு மற்றும் நேர மேலாண்மை திறன்களை மாஸ்டர் செய்ய இந்த நேரம் சிறந்தது. பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்து உரையாற்றும் போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது துல்லியத்தையும் தரத்தையும் எவ்வாறு பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது அவசியம்.
(ஆசிரியர் தலைமை கல்வி அதிகாரி, வித்யாமந்திர் வகுப்புகள்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.