scorecardresearch

NEET UG 2023; நீட் தேர்வு இயற்பியல் பிரிவில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

NEET UG 2023: நீட் தேர்வு இயற்பியல் பிரிவில் அதிக மதிப்பெண் பெற கடைசி நேர டிப்ஸ்; முக்கிய தலைப்புகள் மற்றும் திருப்புதல் முறைகள்

neet exam
நீட் தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

சௌரப் குமார்

நீட் (NEET UG) தேர்வில் இயற்பியல் பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்புபவர்களுக்கு பலவிதமான கோட்பாடு மற்றும் கணித எண் சிக்கல்களின் ஈடுபாடு போன்றவை கடினமாக இருக்கலாம். நீட் தேர்வில் உயிரியல் முதன்மைப் பாடமாக இருக்கும் அதே வேளையில், எளிதான கற்றல் நுட்பம் உயிரியல் பாடத்தில் மாணவர்களுக்குப் பயனளிக்கும், ஆனால் இயற்பியல் பாடத்திற்கு ​​தயாரிப்புத் திட்டத்தில் நடைமுறை பயிற்சி சிறப்பாக இல்லாததால், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அடிப்படைக் கருத்துகளைப் பயன்படுத்தும்போது, ​​உங்களுக்கு சிரமம் ஏற்படலாம்.

நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது, எனவே புதிதாக படிப்பதற்கு நேரம் இல்லை. நீட் தேர்வின் இயற்பியலில் உள்ள அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கும் வகையில், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் விரைவாகத் தங்கள் தயாரிப்புகளில் தங்கள் நிலையை தீவிரப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்: NEET UG 2023; நீட் தேர்வு வேதியியல் பிரிவில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

சரியான நேரத்தில் முழு பாடத்திட்டத்தையும் முழுமையாக உள்ளடக்கிய ஒரு திறமையான மற்றும் புத்திசாலித்தனமான செயல் திட்டம் நீட் தேர்வில் வெற்றிக்கான முதல் படியாகும்.

பின்வரும் குறிப்புகள் மற்றும் நுட்பங்கள் நீட் தேர்வின் இயற்பியல் பிரிவில் அதிக மதிப்பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கும்:

உங்கள் பாடத்திட்டத்தை அறிந்து, அதிக வெயிட்டேஜ் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் – நீட் தேர்வின் இயற்பியல் பாடத்திட்டத்தில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் இருந்து சம அளவில் கேள்வி கேட்கப்படுவதால், ஒவ்வொரு பகுதிக்கும் சமமான கவனம் செலுத்துவது முக்கியம். பெரும்பாலான வல்லுனர்கள் மெக்கானிக்ஸ் பாடம் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு கடினமான பாடம் என்று நம்புகிறார்கள், இருப்பினும் நீட் தேர்வின் கேள்விகளில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட 35% மதிப்பெண்கள் இந்த பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது. இதன் விளைவாக, இந்த தலைப்பை புறக்கணிக்க முடியாது. மற்ற முக்கியமான தலைப்புகளான ஒளியியல், மின்சாரம் மற்றும் காந்தவியல் ஆகியவற்றில் நல்ல கருத்தியல் தெளிவு இருந்தால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

பயனுள்ள நேர மேலாண்மை மற்றும் புத்திசாலித்தனமான திட்டமிடல் முக்கியமானது – பாடங்களையும் தலைப்புகளையும் திறம்படப் பிரிப்பதன் மூலம் உங்கள் நேரத்தை திறமையாகப் பயன்படுத்தும் ஒரு ஆய்வு அட்டவணையை உருவாக்கவும். ஒவ்வொரு பாடத்திற்கும் போதுமான நேரம் கொடுங்கள், இதனால் ஒவ்வொரு அலகு மற்றும் அத்தியாயம் பொருத்தமான கவனத்தைப் பெறுகிறது.

அதிகமான புத்தகங்கள் மற்றும் பிற மெட்டீரியல்களைப் பார்க்க வேண்டாம் – கருத்துகளை வலுப்படுத்த, நீங்கள் புரிந்துகொள்வதற்கு எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் மெட்டீரியல்களைத் தேர்ந்தெடுத்து படிக்கவும். இதற்கு NCERT புத்தகங்களைத் தேர்வுசெய்து படிக்கலாம், இது மிகவும் அடிப்படையான மற்றும் எளிமையான உள்ளடக்கத்தை கருத்தியல் தெளிவுக்காக வழங்குகிறது.

சூத்திரங்கள் அவசியம் – இயற்பியலில் பல கணித மற்றும் எண்ணியல் சிக்கல்கள் இருப்பதால் சூத்திரங்களைக் கற்றுக்கொள்வது சிறந்த உத்திகளில் ஒன்றாகும். குறைந்த நேரம் இருப்பதால், மாணவர்கள் கையால் எழுதப்பட்ட சூத்திரங்களுடன் சேர்ந்த குறிப்புகளை படிக்கலாம் மற்றும் தினசரி அடிப்படையில் அவற்றைத் திருப்பி படிப்பது நல்லது.

(கட்டுரையாளர், தலைமை கல்வி அதிகாரி (CAO), வித்யாமந்திர் வகுப்புகள்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Neet ug 2023 tips toughest section physics