NIRF தரவரிசை 2023 சிறந்த மருத்துவக் கல்லூரிகள்: இன்று புதுதில்லியில் வெளியிடப்பட்ட இந்த ஆண்டின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2023 இல் டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
Advertisment
எய்ம்ஸ் டெல்லியுடன், கடந்த ஆண்டு, சண்டிகரின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC - வேலூர்) மற்றும் பெங்களூரின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டன. இந்த ஆண்டும் இதே கல்வி நிறுவனங்கள் அதே இடங்களை தக்கவைத்துள்ளன.
புதுச்சேரி ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஆறாவது இடத்தில் இருந்தது. அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கடந்த ஆண்டு எட்டாவது இடத்திலிருந்து இந்த ஆண்டு ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் இந்த ஆண்டு ஏழாவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டும் இந்த கல்வி நிறுவனம் இதே இடத்தில்தான் இருந்தது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) இந்த ஆண்டு ஐந்தாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி கடந்த ஆண்டு 10வது தரவரிசையில் இருந்து லேசான முன்னேற்றத்துடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கிடையில், ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர், ஜே.என்.யு மற்றும் ஜமீலா மில்லியா இஸ்லாமியா ஆகியவை நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil