Advertisment

நீட் தேர்வு 2024: 7 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த நீட் தேர்வர்கள் எண்ணிக்கை; கட் ஆஃப் கிடுகிடுவென உயரும் ரகசியம் இது தான்!

NEET UG 2024: நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்வு; இந்த ஆண்டு இன்னும் அதிகம்; கட் ஆஃப் கிடுகிடுவென உயரும் ரகசியம் இது தான்!

author-image
WebDesk
New Update
neet mbbs

NEET UG 2024: நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்வு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுச் செயல்முறை இன்று (மார்ச் 9) முடிவடையும் நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET UG 2024) தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. NEET UG தேர்வு 2024 மே 5 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும்.

இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இன்று இரவு 9 மணியுடன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் முடிவடைகிறது. எனவே NEET UG பதிவை இன்னும் முடிக்காத மருத்துவ ஆர்வலர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விண்ணப்பப் பதிவு செயல்முறை முடிந்ததும் விண்ணப்பதாரர்களுக்கு எந்த திருத்தும் வசதியும் இருக்காது. இருப்பினும், தேசிய தேர்வு முகமை பதிவு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் நீட் படிவத்தைத் திருத்த அனுமதிக்கப்படும் என்றும் அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.1,700 செலுத்த வேண்டும், பொது-EWS மற்றும் ஓ.பி.சி-NCL பிரிவினர் ரூ.1,600 செலுத்த வேண்டும். SC, ST, PwBD, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

தவறான புகைப்படம், கட்டைவிரல் பதிவு, சான்றிதழ்கள் அல்லது அட்மிட் கார்டை சேதப்படுத்துதல் ஆகியவை நியாயமற்ற வழிமுறையாக கருதப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நீட் தேர்வுக்கு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வரை நேரம் இருப்பதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது, குறிப்பாக 2017 ஆம் ஆண்டு முதல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் எழுதியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது. நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடும் போட்டி ஏற்பட்டு கட் ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரித்து வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் நீட் விண்ணப்பதாரர்களின் விவரம் இங்கே

நீட் தேர்வு ஆண்டு

மொத்த பதிவுகளின் எண்ணிக்கை

தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை

2017

11,38,890

10,90,085

2018

13,26,725

12,69,922

2019

15,19,375

14,10,755

2020

15,97,435

13,66,945

2021

16,14,777

15,14,275

2022

18,72,343

17,64,571

2023

20,87,462

20,38,596

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment