NEET UG 2024: தேசிய தேர்வு முகமை (NTA) பிப்ரவரி 9, வெள்ளிக்கிழமை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2024 விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியது. இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே தேர்வான நீட் தேர்வான, மே 5, 2024 அன்று நடைபெறும். தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்துகிறது. விண்ணப்பப் பதிவு மார்ச் 9 வரை திறந்திருக்கும். பதிவு செய்ய விரும்பும் இளங்கலை மருத்துவ ஆர்வலர்கள் புதிய NEET இணையதளம் http://neet.ntaonline.ac.in/ மூலம் NEET 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024 Application: Postcard size photograph, certificates, things to upload at neet.ntaonline.ac.in
நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்த இந்திய விண்ணப்பதாரர்களுக்கு, பதிவுக் கட்டணம் ரூ. 1,700. இருப்பினும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வுகள் உள்ளன.
NEET UG 2024 விண்ணப்பப் படிவம்: பதிவேற்ற வேண்டிய ஆவணங்கள், பிற தேவைகள்
நீட் தேர்வு விண்ணப்பப் படிவம் 2024 ஐ நிரப்ப, மருத்துவ விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐ.டி மற்றும் மொபைல் எண்ணைக் கொண்டிருக்க வேண்டும். கூடுதலாக, தேர்வர்கள் முகக்கவசங்கள் இல்லாமல் தங்களை புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக காதுகள் உட்பட 80% முகம் தெரிய வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், விண்ணப்பதாரர்கள் சில முக்கியமான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும், குறிப்பாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (பரிந்துரைக்கப்பட்ட விவரக்குறிப்புகளின்படி), வங்கிக் கணக்கு விவரங்கள், கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.
NEET UG 2024: பதிவேற்ற வேண்டியவை
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- அஞ்சல் அட்டை அளவு புகைப்படம்
- இடது மற்றும் வலது கை விரல்கள் மற்றும் கட்டைவிரல் பதிவு
- கையொப்பம்
- சாதி சான்றிதழ்
- மாற்றுத்திறனாளிச் சான்றிதழ் (PwBD) சான்றிதழ் (தேவைப்படின்)
- குடியுரிமை சான்றிதழ்
தேர்வர்கள் ஆறு முதல் எட்டு பாஸ்போர்ட் அளவு மற்றும் நான்கு ஆறு போஸ்ட்கார்ட் அளவு (4” X6”) வெள்ளை பின்னணியுடன் வண்ண புகைப்படங்களை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றம் செய்யவும், தேர்வுக்காகவும், ஆலோசனை மற்றும் சேர்க்கைக்காகவும் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். நீட் தேர்வு தொடர்பான அனைத்து ஆவணங்களுக்கும் மற்றும் அனைத்து நோக்கங்களுக்கும் ஒரே புகைப்படம் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“