நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரி பற்றிய தகவல்களையும், அந்தக் கல்லூரியில் சேர்க்கைப் பெறுவது எப்படி என்பது பற்றியும் இப்போது பார்ப்போம்.
Advertisment
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET UG 2024) தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. NEET UG தேர்வு 2024 மே 5 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும்.
இந்த நிலையில், எம்.பி.பி.எஸ் படிக்க விரும்புபவர்கள் அதிகம் விரும்பக்கூடிய மருத்துக் கல்லூரியான ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, புனே (Armed Forces Medical College, Pune) குறித்து தகவல்களை இப்போது பார்ப்போம். கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் இந்தக் கல்லூரி குறித்து முழுமையான விளக்கத்தை அளித்துள்ளார். இந்தக் கல்லூரியில் சேர்க்கைப் பெற 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். நீட் தேர்வு மற்றும் ToELR தேர்வின் 75% மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வின் 25% மதிப்பெண்களும் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இந்தக் கல்லூரியில் மொத்தம் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மருத்துவ படிப்புகளுக்கு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க விருப்பமா? என கேட்கப்படும். அதற்கு ஆம் என்று தெரிவு செய்தவர்களில் டாப் 1500 பேருக்கு ToELR தேர்வு நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு நடைபெறும். பின்னர் தகுதிப் பட்டியல் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“