தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளை படிப்பதற்கான தகுதிகள் என்ன? எங்கு படிக்கலாம்? என்பன உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இணையாக கருதப்படுவது ஆயுஷ் படிப்புகள். இதில் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் அடங்கும். இந்தப் படிப்புகளின் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு நீட் தகுதி தேவையில்லை.
இந்தநிலையில், ஆயுஷ் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள கல்லூரிகளின் விபரங்களை இப்போது பார்ப்போம்.
சித்தா
B.S.M.S - Bachelor of Siddha Medicine and Surgery. இது படிப்பு (5 ஆண்டு படிப்பு மற்றும் ஓராண்டு பயிற்சி) படிப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
அரசு சித்த மருத்துவ கல்லூரிகள்
1). அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி
2). அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை
3). நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் சித்தா, தாம்பரம், சென்னை
சுயநிதி சித்த மருத்துவக் கல்லூரிகள்
1). அகில திருவிதாங்கூர் சித்த மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி
2). அன்னை மருத்துவக்கல்லூரி சித்தா மற்றும் ஆராய்ச்சி மையம், கும்பகோணம்
3). எக்செல் சித்தா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், நாமக்கல்
4). ஜே.எஸ்.ஏ. மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், விழுப்புரம்
5). மரியா சித்தா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, கன்னியாகுமாரி
6). நந்தா சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஈரோடு மாவட்டம்
7). ஆர்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
8). சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரி, சேலம்
9). சர் ஐசக் நியுட்டன் சித்த மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்
10). ஸ்ரீ இந்திரா கணேசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் - சித்த மருத்துவக் கல்லூரி, திருச்சி
11). சுதா சசீந்திரன் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கன்னியாகுமாரி
12). ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், மேற்கு தாம்பரம், சென்னை
13). வேலுமயிலு சித்த மருத்துவக்கல்லூரி, காஞ்சிபுரம்
ஆயுர்வேதம்
B.A.M.S. - Bachelor of Ayurvedic Medicine and Surgery இந்த B.A.M.S. படிப்பு (5 1/2 ஆண்டு படிப்பு மற்றும் ஓராண்டு பயிற்சி) படிப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
1). அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, கோட்டார், நாகர்கோவில்
சுயநிதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்
1). ஆயுர்வேத கல்லூரி, கோயம்புத்தூர்
2). தர்மா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதூர்
3). இம்மானுவேல் அரசர் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி, கன்னியாகுமாரி
4). மரியா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, கன்னியாகுமாரி.
5). நந்தா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவனை, ஈரோடு
6). ஸ்ரீசாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அன்ட ரிசர்ச் சென்டர், மேற்கு தாம்பரம், சென்னை
ஹோமியோபதி
B.H.M.S - Bachelor of Homoeopathic Medicine and Surgery. இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
1). அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மதுரை
சுயநிதி ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள்
1). டாக்டர் ஹான்னிமேன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி அன்ட் ரிசர்ச் சென்டர், நாமக்கல்
2). எக்ஸெல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி, நாமக்கல்
3). மரியா ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, கன்னியாகுமாரி
4). மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி, கோயம்புத்தூர்
5). எஸ்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி
6). ஆர்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
7). சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி
8). ஸ்ரீ பரணி ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, நாமக்கல்
9). சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி அன்ட் ரிசர்ச் சென்டர், சேலம்
10). ஸ்ரீசாய்ராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, மேற்கு தாம்பரம், சென்னை
11). வெங்கடேஷ்வரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, காரப்பாக்கம், போரூர், சென்னை
12). ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல்
B.N.Y.S. - Bachelor of Naturopathy and Yogic Sciences. பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களைப் படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இயற்கை மருத்துவம் இன்று பலராலும் விரும்பப்படுவதால் இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அரசு நேச்சுரோபதி கல்லூரி
1). அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையின் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை.
2). இண்டர்நேசனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் யோகா அன்ட் நேச்சுரோபதி மெடிக்கல் சயின்ஸ், செங்கல்பட்டு
சுயநிதி நேச்சுரோபதி கல்லூரிகள்
1). அன்னை நேச்சுரோபதி கல்லூரி மற்றும் யோகா சயின்ஸ், கும்பகோணம்
2). ஆதி நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, வேலூர்
3). எக்செல் மருத்துவக்கல்லூரி - நேச்சுரோபதி மற்றும் யோகா, நாமக்கல்
4). ஜி.டி.என். மருத்துவக்கல்லூரி நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்ஸ் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல்
5). ஜே.எஸ்.எஸ். இன்ஸ்டிட்யூட் ஆப் நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்சஸ், ஊட்டி
6). கொங்கு நேச்சுரோபதி அண்ட் யோகா மருத்துவக் கல்லூரி, ஈரோடு
7). கிருஷ்ணா நேச்சுரோபதி அண்ட் யோகா மருத்துவக் கல்லூரி, திருச்சி
8). மதர் தெரசா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
9). நந்தா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, ஈரோடு
10). எஸ்.தங்கப்பழம் மருத்துவக்கல்லூரி நேச்சுரோபதி யோகிக் சயின்ஸ் சென்டர், தென்காசி
11). ஸ்ரீ இந்திரா கணேசன் இன்டிட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நேச்சுரோபதி அண்ட் யோகா மருத்துவ கல்லூரி, திருச்சி
12). சர் ஐசக் நியூட்டன் நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி, நாகப்பட்டினம்
13). சிவராஜ் நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, சேலம்
14). ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகா நேச்சுரோபதி கல்லூரி, கன்னியாகுமரி
15). எஸ்.வி.எஸ். யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் நேச்சுரோபதி ஆராய்ச்சி மையம், கள்ளக்குறிச்சி
16). சுவாமி விவேகானந்தா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, சேலம்
யுனானி
B.U.M.S. (Bachelor o Unani Medicine and Surgery). பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் வெற்றிபெற்று ‘அப்சல் உல் இல்மா அரபிக் (Afzal Ul Ilma Arabic)’ என்னும் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்தப் படிப்பு தமிழ்நாட்டில் ஒரே ஒரு கல்லூரியில் மட்டுமே நடத்தப்படுகிறது. அது, யுனானி அரசு மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.