NEET UG 2024: தேசிய தேர்வு முகமை (NTA) ஏப்ரல் 24 அன்று இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2024க்கான (NEET UG 2024) சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை வெளியிட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு மைய நகரம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தில் பார்க்க முடியும் – exams.nta.ac.in/NEET/
ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024: City intimation slip released; websites to check
அதிகாரப்பூர்வ தேசிய தேர்வு முகமை அட்டவணையின்படி, மே 5 ஆம் தேதி, பேனா மற்றும் பேப்பர் முறையில் 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும்.
நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் டவுன்லோட் செய்வது எப்படி?
1). அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் — exams.nta.ac.in/NEET/
2). முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் இணைப்பைக் கிளிக் செய்யவும்,
3). தேவையான உள்நுழைவுச் சான்றுகளுடன் அதாவது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழையவும்
4). இப்போது சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் உங்கள் திரையில் கிடைக்கும்
5). அதைப் பதிவிறக்கி, எதிர்கால குறிப்புகளுக்குச் சேமிக்கவும். தேவைப்படின் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நீட் தேர்வு அட்மிட் கார்டில் விண்ணப்பதாரரின் விவரங்கள், புகைப்படம் அல்லது கையொப்பங்கள் தொடர்பாக ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால், உடனடி நடவடிக்கை அவசியம். விண்ணப்பதாரர்கள் உடனடியாக தேசிய தேர்வு முகமை உதவி எண்ணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இதுபோன்ற சிக்கல்கள் இருந்தாலும், விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி அட்டையைப் பயன்படுத்தி மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்கலாம். இருப்பினும், பதிவுகளில் தேவையான திருத்தங்கள் பின்னர் செய்யப்படும் என்று தேசிய தேர்வு முகமை உறுதியளிக்கிறது.
இந்தமுறை நீட் தேர்வுக்கு 23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், 24 மாணவர்கள் ‘மூன்றாம் பாலினத்தவர்கள்’.
2021 ஆம் ஆண்டில், நீட் தேர்வுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கு, ஜூன் 29 ஆம் தேதி சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியிடப்பட்டது, ஜூலை 12 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு, ஜூலை 17 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இறுதியாக, முந்தைய ஆண்டில், நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தேர்வுக்கு முன்னதாக மே 4 அன்று அட்மிட் கார்டு வெளியிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“