Advertisment

NEET UG 2024: நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியீடு

NEET UG 2024: நீட் தேர்வு சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் எப்போது வெளியாகும்? ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? முக்கிய அப்டேட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet ug 2024

நீட் தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

NEET UG 2024: தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் சீட்டு - https://neet.ntaonline.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் வெளியான பிறகு, நீட் தேர்வு ஹால் டிக்கெட் வழங்கப்படும். நீட் தேர்வு மே 5 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு நகர மையத் தகவல் சீட்டுகள் மற்றும் அனுமதி அட்டைகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையலாம்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024 City Slip: When is NTA releasing exam centre intimation slip?

கடந்த ஆண்டு, நீட் தேர்வு சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டது மற்றும் மே 7 ஆம் தேதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 4 அன்று வெளியிடப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 29 ஆம் தேதி சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் வெளியிடப்பட்டது, அதே நேரத்தில் ஹால் டிக்கெட் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், நீட் ஹால் டிக்கெட் செப்டம்பர் 6 ஆம் தேதி வழங்கப்பட்டது மற்றும் நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்பட்டது. 

நீட் தேர்வு சிட்டி ஸ்லிப்: பதிவிறக்குவது எப்படி?

படி 1: அதிகாரப்பூர்வ நீட் இணையதளத்தைப் பார்வையிடவும்

படி 2: முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: உள்நுழைய தேவையான சான்றுகளை (விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி) உள்ளிடவும்.

படி 4: சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் கிடைக்கும்.

படி 5: எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கி சேமிக்கவும்.

நீட் தேர்வு அனுமதி அட்டையில் மாணவரின் விவரங்கள் அல்லது அவரது புகைப்படம் மற்றும் கையொப்பங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், விண்ணப்பதாரர் உடனடியாக தேசிய தேர்வு முகமையின் உதவி எண்ணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணுக வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி அட்டையுடன் மருத்துவ நுழைவுத் தேர்வில் எழுதுவார்கள் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இருப்பினும், பதிவில் திருத்தங்கள் செய்வதற்கு தேசிய தேர்வு முகமை தேவையான நடவடிக்கையை பின்னர் எடுக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment