அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) கவுன்சிலிங் 2024க்கான விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 14 அன்று தொடங்கும். நீட் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – mcc.nic.in.
ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024 Counselling 2024: Registration begins on August 14; application process, know about choice filling, seat allotment
முதல் சுற்றுக்கான விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20 வரை (நண்பகல் 12) நடைபெறும் மற்றும் ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 20 (பிற்பகல் 3) வரை கட்டணம் செலுத்தும் வசதி கிடைக்கும்.
சாய்ஸ் ஃபில்லிங் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு முடிவடையும். ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11.55 மணி வரை சாய்ஸ் லாக்கிங் தொடங்கும். பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மூலம் தற்காலிக சீட் மேட்ரிக்ஸின் சரிபார்ப்பு ஆகஸ்ட் 14 முதல் 15 வரை செய்யப்படும். முதல் சுற்றுக்கான இருக்கை ஒதுக்கீடு செயலாக்கம் ஆகஸ்ட் 21 முதல் 22 வரை நடக்கும். முதல் சுற்று இட ஒதுக்கீடு முடிவு ஆகஸ்ட் 23 அன்று அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 24 மற்றும் 29 க்கு இடையில் ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சென்று சேர்க்கை பெற வேண்டும்.
நீட் கவுன்சிலிங்கின் 2வது சுற்றுக்கு, சீட் மேட்ரிக்ஸின் சரிபார்ப்பு நிறுவனங்களால் செப்டம்பர் 4 முதல் 5 வரை செய்யப்படும். பதிவு செயல்முறை செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10 (மதியம் 12) வரை தொடரும். கட்டணம் செலுத்தும் வசதி செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 3 மணி வரை கிடைக்கும்.
சாய்ஸ் ஃபில்லிங் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு முடிவடையும். செப்டம்பர் 10-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11.55 மணி வரை சாய்ஸ் லாக்கிங் நடைபெறும். 2-வது சுற்று இட ஒதுக்கீடு முடிவு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்படும்.
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் 2024: பதிவு செய்வதற்கான படிகள்
படி 1: mcc.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லவும்
படி 2: இளங்கலை கவுன்சிலிங் டேப்பில் கிளிக் செய்யவும்
படி 3: பதிவு செய்வதற்கான நீட் கவுன்சலிங் இணைப்பு காட்டப்படும். அதை கிளிக் செய்யவும்
படி 4: தேவையான தகவலை உள்ளிட்டு பதிவு செய்யவும்
படி 5: இப்போது உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
படி 6: ஆவணங்களைப் பதிவேற்றவும், பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி சமர்ப்பிக்கவும்
படி 7: விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங்கை நடத்துகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், அனைத்து எய்ம்ஸ் (AIIMS) நிறுவனங்கள் மற்றும் ஜிப்மர் (JIPMER புதுச்சேரி மற்றும் காரைக்கால்) ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு நீட் கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக நடத்தப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.