NEET UG 2024: மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET UG) கவுன்சிலிங் 2024 இன் இரண்டாம் சுற்றுக்கான பதிவை நாளை (செப்டம்பர் 5) தொடங்கும். இந்த நீட் கவுன்சலிங் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்களுக்கான சேர்க்கைக்கானது.
ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024 Counselling: Registration for round 2 to begin tomorrow at mcc.nic.in
மருத்துவ கவுன்சலிங் கமிட்டியின் நீட் கவுன்சிலிங் 2 ஆம் சுற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 10 வரை உள்ளது. விருப்பமுள்ளவர்கள் mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 2வது சுற்றில் முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி மீண்டும் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் கவுன்சிலிங்கின் முதல் சுற்றில் பதிவு செய்து, சீட் கிடைக்காத அல்லது ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
நீட் கவுன்சலிங் 2-ம் சுற்று அட்டவணை
சாய்ஸ் ஃபில்லிங் மற்றும் சமர்பித்தல்: செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 10 வரை இரவு 11:55 மணி வரை
இருக்கை ஒதுக்கீடு செயலாக்கம்: செப்டம்பர் 11 முதல் 12 வரை
சீட் ஒதுக்கீடு முடிவுகள்: செப்டம்பர் 13
அறிக்கையிடல் மற்றும் சேர்க்கை பெறுதல்: செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 20 வரை
சேர்க்கை பெற்ற விண்ணப்பதாரர்களின் சரிபார்ப்பு: செப்டம்பர் 21 முதல் 22 வரை
ஏதேனும் தொழில்நுட்ப விசாரணை தேவைப்பட்டால், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்கண்ட தொடர்பு எண்களில் மருத்துவ கவுன்சலிங் கமிட்டியை தொடர்பு கொள்ளலாம் – 011-69227413, 69227416, 69227419, மற்றும் 69227423
இந்த கவுன்சிலிங்கானது 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் மத்திய மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள், ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS), பணியாளர் மாநில காப்பீட்டுக் கழக (ESIC) நிறுவனங்கள், எய்ம்ஸ் (AIIMS) மற்றும் ஜிப்மர் (JIPMER) ஆகியவற்றில் உள்ள இடங்களை உள்ளடக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“