Advertisment

NEET UG 2024: விரைவில் நீட் கவுன்சலிங்; நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே

NEET UG 2024: நீட் கவுன்சலிங் தேதிகள் விரைவில் அறிவிப்பு; அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் எப்படி வழங்கப்படுகின்றன? இடஒதுக்கீட்டு அளவு என்ன? முக்கிய தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
engineering admission

தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET-UG) முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் 4 அன்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. ஒரு சுருக்கமான சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2024 அமர்வுக்கான மறு திருத்தப்பட்ட ஸ்கோர்கார்டையும் கட்-ஆஃப்பையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

நீட் தேர்வின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் கவுன்சிலிங்கிற்கு, மாணவர்கள் mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், அதற்கான அறிவிப்பு வெளியானவுடன், கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்க முடியும்.

எந்தவொரு மருத்துவக் கல்லூரியிலும் இளங்கலை இருக்கையைப் பெறுவதற்கு, போர்ட்டலில் பதிவுசெய்துகொள்வதால் மட்டும், தானாக எந்த உரிமையும் வழங்கப்படாது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவரின் சேர்க்கை தகுதி என்பது, சேர்க்கை அளவுகோல்கள், தகுதிகள் மற்றும் அந்தந்த பல்கலைக்கழகங்கள், மருத்துவ நிறுவனங்கள், இந்திய மருத்துவ கவுன்சில், மாநில அல்லது மத்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் அளவுகோல்களுக்கு உட்பட்டது.

மாநில மற்றும் மத்திய கவுன்சிலிங் பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான நீட் கவுன்சிலிங் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் சுகாதார சேவைகள் இயக்குநரகத்தால் நடத்தப்படுகிறது. இளநிலை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்களில் 15 சதவீத இடங்களுக்கும், முதுகலை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்திற்கும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் (DM/Mch) 100 சதவீத இடங்களுக்கும் இயக்குநரகம் ஆன்லைன் கவுன்சிலிங்கை நடத்துகிறது.

NEET UG 2024: கவுன்சிலிங் சுற்றுகள்

2023 இல், நீட் கவுன்சிலிங்கில் நான்கு சுற்றுகள் இருந்தன.

நிரப்பப்படும் இடங்கள்

மாநில கல்லூரிகளில் உள்ள 15 சதவீத எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் படிப்புகளின் அகில

இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் 100 சதவீத எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் இடங்கள்

இந்தியா முழுவதும் எய்ம்ஸ் (AIIMS) கல்லூரிகளில் உள்ள 100 சதவீத எம்.பி.பி.எஸ் இடங்கள்

ஜிப்மர் (புதுச்சேரி/ காரைக்கால்)

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (VMMC/ ABVIMS/ESIC பல் மருத்துவம்)

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல் மருத்துவ இடங்கள்

இ.எஸ்.ஐ.சி (ESIC) 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்

15 சதவீத அகில இந்திய இடங்களுக்கான இட ஒதுக்கீடு கொள்கை:

எஸ்.சி- 15 சதவீதம்

எஸ்.டி- 7.5 சதவீதம்

ஓ.பி.சி- (கிரீமிலேயர் அல்லாத பிரிவு) - 27 சதவீதம்

இ.டபுள்யூ.எஸ் (EWS)- மத்திய அரசின் விதிமுறைகளின்படி- 10 சதவீதம்

மாற்றுத் திறனாளி (PwD) தேசிய மருத்துவ ஆணைய (NMC) விதிமுறைகளின்படி உள் இட ஒதுக்கீடு- 5 சதவீதம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment