Advertisment

9 மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ் 'சீட்'கள் மட்டுமே: தமிழகத்தில் நீட் கட் ஆஃப் அதிகரிக்கும் பின்னணி

தமிழக மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிப்பு இல்லை; நீட் தேர்வில் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்கள்; எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு

author-image
WebDesk
New Update
MBBS

தமிழக மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிப்பு இல்லை; எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Advertisment

ஏனெனில் இந்த ஆண்டு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை அல்லது தற்போதுள்ள அரசு கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை என TOI செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 3 சுயநிதி நிறுவனங்கள் உட்பட 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் நிலுவையில் உள்ளன. 

மறுபுறம் இடங்கள் அதிகரிக்கப்படாத நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் நீட் தேர்வில் 600க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற குறைந்தது 2,000 மாணவர்களை சுட்டிக் காட்டுகின்றன. 2023ல் 600க்கு மேல் 1,538 மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு தமிழகத்தில் எட்டு மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதனால் அரசு மருத்துவப் படிப்புக்கான கட் ஆஃப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும் என்று கல்வி ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழக மாணவர்கள் அதிகளவில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர, அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் தமிழகக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக தமிழகம் 15% இடங்களை (சுமார் 770) ஒப்படைக்கிறது. மத்திய அரசு கல்லூரிகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரவும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் உள்ளூர் மாணவர்களுக்கு மாநிலத்தில் அதிக இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும், என்று கல்வி ஆலோசகர் கூறுகிறார்.

2023 ஆம் ஆண்டில், தேசிய மருத்துவ ஆணையம் ஓராண்டு விலக்கு அளித்து, நவம்பர் 16 முதல் 23 வரை ஆன்லைன் விண்ணப்பப் போர்ட்டலைத் திறந்தபோது, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை தமிழக அரசு இழந்துவிட்டது. செங்கல்பட்டு மற்றும் திருச்சி உட்பட குறைந்தது ஒன்பது அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 150 இடங்களுக்கு எதிராக தலா 100 இருக்கைகள் மட்டுமே உள்ளன, அவை பத்தாண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில், இன்னும் இடங்களை உயர்த்த அனுமதி கிடைக்கவில்லை.

தேர்வு நெறிமுறைகளில் உள்ள குளறுபடிகளுக்கு சூப்பர்நியூமரரி இடங்களை அனுமதிக்கவோ அல்லது சமநிலையை உறுதிப்படுத்த மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்யவோ உச்ச நீதிமன்றத்தை அரசு கேட்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேரத்தை ஈடுசெய்ய சுமார் 1,500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை வழங்கியதாக தேசிய தேர்வு முகமை கூறுகிறது. கூடுதலாக, இயற்பியலில் ஒரு கேள்விக்கு, தேசிய தேர்வு முகமை இரண்டு பதில்களை தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆனால் நெகட்டிவ் மார்க் இருப்பதால், இரண்டு விடைகளைப் பார்த்த பல மாணவர்கள் அதற்குப் பதில் அளித்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும், அல்லது முழு கேள்வியும் விலக்கப்பட வேண்டும், என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu Mbbs NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment