இ.எஸ்.ஐ கல்லூரிகளில் 466 எம்.பி.பி.எஸ் இடங்கள்; வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இ.எஸ்.ஐ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள்; 450க்கும் மேற்பட்ட இடங்கள்; வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இ.எஸ்.ஐ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள்; 450க்கும் மேற்பட்ட இடங்கள்; வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

author-image
WebDesk
New Update
ESI Hospital

இ.எஸ்.ஐ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களின் வாரிசுகளுக்காக, மருத்துவ கல்லூரிகளில் உள்ள 466 எம்.பி.பி.எஸ்., இடங்கள், பல் மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாடு முழுவதும் 11 இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள், ஒரு பல் மருத்துவ கல்லூரி, 2 செவிலியர் கல்லூரிகள் உள்ளன. இந்த 11 கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் குறிப்பிட்ட சில இடங்கள், இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்க இ.எஸ்.ஐ., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரியானா, மேற்கு வங்காளம் கொல்கத்தா, கர்நாடகா, ஹைதரபாத், ராஜஸ்தான், பாட்னா, கோயம்புத்துார் இ.எஸ்.ஐ.,மருத்துவ கல்லூரி, இமாச்சல்பிரதேசம், கேரள மாநிலம் கொல்லம் அரசு மருத்துவ கல்லூரி என 11 கல்லூரிகளில் 466 எம்.பி.பி.எஸ்., இடங்கள், இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இது தவிர, கர்நாடகாவில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவ பல் கல்லூரியில் 28 பி.டி.எஸ்., இடங்களும், பெங்களூரில் உள்ள இ.எஸ்.ஐ., நர்சிங் கல்லூரியில் 30, கர்நாடகா குல்பர்காவில் உள்ள இ.எஸ்.ஐ. நர்சிங் கல்லூரியில் 30 என, 60 பி.எஸ்.சி., நர்சிங் இடங்கள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் உள்ள மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் படிப்புகள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இ.எஸ்.ஐ.,களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு சேர்க்கை மூலம் வழங்கப்படும். 

இ.எஸ்.ஐ., கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் இ.எஸ்.ஐ., சந்தாதாரர்களின் வாரிசு வாரிசுகள், www.esic.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Neet Mbbs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: