நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வு சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் ஏப்ரல் நான்காவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) வருகிற மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் NEET UG தேர்வு 2024 மே 5 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும். இந்த முறை, நீட் தேர்வுக்கு மொத்தம் 23,81,833 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், நீட் தேர்வு சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் ஏப்ரல் நான்காவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் என்பது குறிப்பிட்ட மாணவருக்கு, நீட் தேர்வு எந்த நகரத்தில் நடைபெறும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் நடைமுறையாகும். இதன் மூலம் மாணவர்கள் குறிப்பிட்ட நகரத்திற்கான பயணத் திட்டமிடலை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம்.
தேசிய தேர்வு முகமை இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், நீட் தேர்வு மே 5 ஆம் தேதி என்பதால் ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்வுக்கூட சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“