நீட் தேர்வின் நகர வாரியாக மற்றும் தேர்வு மைய வாரியாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகள், தேர்வில் பயிற்சி மையங்கள் ஆதிக்கம் செலுத்துவதை வெளிப்படுத்துகின்றன.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண்களில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது உட்பட பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மைய வாரியான மற்றும் நகர வாரியான முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முடிவுகளில் பயிற்சி மையங்கள் நிறைந்த நகரங்களில் அதிக செயல்திறன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தாகூர் பி.ஜி கல்லூரி, சிகார், ராஜஸ்தான்; மாடர்ன் ஸ்கூல், கோட்டா, ராஜஸ்தான்; சின்மயா வித்யாலயா, கோட்டயம், கேரளா; யூனிட்-1 இன்ஜினியரிங் பள்ளி, ராஜ்கோட், குஜராத்; மற்றும் மாடல் ஸ்கூல், ரோஹ்தக் ஆகியவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதிகமாக இருப்பதாக TOI செய்தி வெளியிட்டுள்ளது.
சிகாரில் உள்ள மையங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் 720க்கு 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் கோட்டாவைப் போலவே கோட்டயமும் அதிக மதிப்பெண் பெற்றவர்களைக் கொண்டுள்ளது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் கோட்டா மற்றும் சிகாருக்குப் பிறகு கோட்டயம் தாகூர் முதுகலை கல்லூரி மையத்திலிருந்து 20%க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் 600 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
உண்மையில், 600-649 (30) மதிப்பெண்களை விட 650-க்கும் மேற்பட்ட (43) மதிப்பெண்கள் பெற்ற அதிகமான விண்ணப்பதாரர்கள் உள்ளனர், மேலும் இவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் விரும்பத்தக்க சீட் கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி.
பயிற்சி வகுப்புகளின் மற்றொரு மையமாக விளங்கும் ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்கில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியவர்கள், சிறப்பாகச் செயல்பட்டதாக தேர்வு முடிவுத் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ரோஹ்தக்கின் மாதிரி பள்ளி மையத்திலிருந்து 734 தேர்வர்களில் ஒருவர் 700 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், மேலும் 14 பேர் 650 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்., 600-649 மதிப்பெண் வரம்பில் 30 பேர் உள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஐ.ஐ.டி-சென்னையின் அறிக்கை, ராஜஸ்தானின் சிகார் மற்றும் கோட்டாவைத் தொடர்ந்து நகர வாரியாக முதல் ரேங்க் வைத்திருப்பவர்களின் (டாப் 1,000) பரவலில் கோட்டயம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, என்பதை வெளிப்படுத்துகிறது.
2023 ஆம் ஆண்டில் முதல் 1000 பேரில் 27 பேரைக் கொண்டிருந்த சிகார், இந்த ஆண்டு 55 பேரைக் கொண்டுள்ளது. அதேபோல், கோட்டாவின் டாப் ரேங்க் மாணவர்களின் எண்ணிக்கை 13ல் இருந்து 35 ஆக உயர்ந்துள்ளது. கோட்டயத்தில் டாப் மாணவர்களின் எண்ணிக்கை 14 பேர் இருந்த நிலையில், இப்போது 25 ஆக அதிகரித்துள்ளது.
கோட்டயத்தின் வித்யானந்தா வித்யாபவன், ஜூனியர் பாசெலியோஸ் ஆங்கில வழிப் பள்ளி மற்றும் சின்மயா வித்யாலயா ஆகியவை நீட் தேர்வில் முறையே 600 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற 8.2%, 11% மற்றும் 10.4% மாணவர்களைக் கொண்டுள்ளன. இந்த மையங்களுக்கு இடையில், 700 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் ஐந்து விண்ணப்பதாரர்கள் உள்ளனர் மற்றும் 650 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற நாடு முழுவதும் உள்ள 30,000 பேரில் 29 பேர் உள்ளனர்.
அடுத்தப்படியாக குஜராத்தில் உள்ள ராஜ்கோட் அதிக டாப்பர்களைக் கொண்டுள்ளது. யூனிட்-1 இன்ஜினியரிங் பள்ளியில் தேர்வெழுதிய 1,968 விண்ணப்பதாரர்களில், 250 பேர் 600 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், மேலும் 12 பேர் 700 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஒருவர் 720க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இங்கு 12.5%க்கும் அதிகமானோர் 600-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
"இந்த இடங்களில் பல பயிற்சி வகுப்புகள் இருப்பதால், இந்த அதிகரிப்புக்கு இது காரணமாக இருக்கலாம்," ஐ.ஐ.டி- சென்னையின் அறிக்கை கூறியது.
இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தாலும், நிறைய மாணவர்கள் பயிற்சி மையம் இருக்கும் நகரத்திலேயே தேர்வு எழுத விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.