Advertisment

நீட் தேர்வு நகர வாரியான ரிசல்ட்; அதிக மதிப்பெண் பெற்றவர்களில் முதலிடத்தில் சிகார்; 2-ம் இடத்தில் நாமக்கல்

நீட் தேர்வு நகர வாரியான தேர்வு முடிவுகள்; பயிற்சி மையங்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் தேசிய தேர்வு முகமை தரவுகள்; சிகாருக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் நாமக்கல்

author-image
WebDesk
New Update
NEET UG

2024 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு (NEET-UG) குறித்த தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்ட தரவுகளில், தேர்வில் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற நகரங்களாக ராஜஸ்தானில் உள்ள சிகார், அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நாமக்கல், கேரளாவின் கோட்டயம், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனுகு, ராஜஸ்தானில் ஜுன்ஜுனு, ஹரியானாவில் குருக்ஷேத்ரா ஆகியவை முன்னிலையில் உள்ளன.

Advertisment

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண்களில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது உட்பட பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மைய வாரியான மற்றும் நகர வாரியான முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது. 

இதனையடுத்து தேசிய தேர்வு முகமை நகரம் மற்றும் மைய வாரியான தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் பயிற்சி மையங்கள் நிறைந்த சிகார், நாமக்கல், கோட்டா, கோட்டயம் உள்ளிட்ட நகரங்கள், 650 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற அதிக மாணவர்களைக் கொண்டுள்ளன என தி இந்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

650 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் விண்ணப்பதாரர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. 

650 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அதிக மாணவர்களைக் கொண்ட நகரங்களில் சிகார் 7.5% (2,037 மாணவர்கள்), நாமக்கல் (5.1%, 313 மாணவர்கள்), கோட்டயம் (4.4%, 544 மாணவர்கள்), தனுகு (4.1%, 41 மாணவர்கள்), ஜுன்ஜுனு (3.96%, 196 மாணவர்கள்) மற்றும் குருக்ஷேத்ரா (3.96%, 196 மாணவர்கள்) ஆகியவை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. ராஜஸ்தானில் புகழ்பெற்ற பயிற்சி மையமான கோட்டாவில், 1,066 பேர் 650 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இது சிகாருக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச முழுமையான எண்ணிக்கையாகும்.

சிகாரில் இருந்து, 149 பேர் (0.55%) 700 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், இது மற்ற நகரங்களை விட மிக அதிகம. ஜெய்ப்பூர் (131, 0.24%), டெல்லி (120, 0.18%), கோட்டா (74, 0.27%), பெங்களூரு (74, 0.25%) கோட்டயம் (61, 0.49%), அகமதாபாத் (53, 0.45%), விஜயவாடா (50, 0.34%), புனே (41, 0.18%), சென்னை (41, 0.18%) ஆகியவை முழுமையான அடிப்படையில் முதல் 10 இடங்களைப் பிடித்தன. நாமக்கல்லில் 31 பேர் (0.52%) 700 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இது சிகாருக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச பங்காகும்.

தமிழகத்தில் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்களில் நாமக்கல்லில்தான் அதிக பங்கு உள்ளது என்பது மாநிலத்தில் நீட் தேர்வுக்கு ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. நீட் அமலாக்கத்திற்கு முன், நாமக்கல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் "டாப்பர்களை" உருவாக்கிய "சூப்பர் பள்ளிகள்" உள்ள நகரமாக இருந்தது. இப்போது, இந்த நகரம் நீட்/ஜே.இ.இ தேர்வுகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிறுவனங்களின் மையமாக உள்ளது.

650 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களில், தமிழ்நாட்டில் வேறு எந்த நகரமும் நாமக்கல்லின் விகிதத்தை (5.1%) நெருங்கவில்லை. இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை, 1.61% மட்டுமே பதிவு செய்தது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனுகு நகரம் முதலிடத்தில் உள்ளது, விஜயவாடா 2.4% உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தேர்வு மையங்களின் அடிப்படையில், சிகாரில் உள்ள தாகூர் பி.ஜி. கல்லூரியில் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற தேர்வர்களின் பங்கு அதிகபட்சமாக (12.64%) இருந்தது. உண்மையில், சிகாரில் இருந்து மேலும் எட்டு மையங்கள் முதல் 10 இடங்களில் இருந்தன, மேலும் முதல் 50 மையங்களில் 37 மையங்கள் சிகாரைச் சேர்ந்தவை. ஹரியானாவின் ரேவாரியில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, அனைத்து மையங்களிலும் 600 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்களில் அதிக எண்ணிக்கையைப் (22.73%, 264 தேர்வர்களில் 60) பதிவுசெய்துள்ளது, இங்கு 25 (9.5%) மாணவர்கள் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் மறுதேர்வு கோரிய மனுதாரர்கள், ரேவாரியில் எண்ணிக்கை முரண்பாடு உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது, 10 மையங்களைக் கொண்ட ஒரு நகரமாக ரேவாரி, மாணவர்களிடையே ஒப்பீட்டளவில் அதிக சராசரி மதிப்பெண் (288) பெற்றுள்ளது. மேலும் அங்குள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் மையம் சராசரியாக 406.34 உடன் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. பொதுவாக ஹரியானாவில், கணிசமான எண்ணிக்கையிலான நகரங்களில் மாணவர்கள் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இது ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக, ஒட்டுமொத்த தேர்வு எழுதுபவர்களில் 3% க்கும் அதிகமானவர்களைக் குறிக்கிறது.

அதிக சராசரியைப் பதிவுசெய்த மையங்களில் உள்ள மதிப்பெண்கள் வழக்கமான இயல்பான விநியோகத்தைப் பின்பற்றவில்லை என்றாலும், குறைந்த சராசரியைக் கொண்ட சில மையங்களும் உள்ளன, ஆனால் இங்கு மிகச் சிறப்பாகச் செயல்பட்ட ஒரு சில மாணவர்களும் உள்ளனர். எனவே, மாநில வாரியாக, நகர வாரியாக, மத்திய வாரியாக மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடாமல் 2024-ஆம் ஆண்டுக்கான தரவை மட்டும் பார்ப்பது, நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகத் தீர்மானமாகச் சுட்டிக் காட்ட உதவாது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam Namakkal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment