தேசிய தேர்வு முகமை (NTA) நீட் தேர்வு (NEET UG 2024) விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேதிகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://exams.nta.ac.in/ என்ற பக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. மார்ச் 9 ஆம் தேதி கடைசி தேதி என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதான தேதிகளை அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திருத்தம் சாளரம் மார்ச் 18 அன்று திறக்கப்படும் மற்றும் மார்ச் 20, 2024 அன்று இரவு 11.50 மணிக்கு மூடப்படும். இந்தக் காலக்கெடுவிற்குப் பிறகு, எந்தச் சூழ்நிலையிலும் மேலும் திருத்தங்கள் அனுமதிக்கப்படாது. திருத்தங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் கட்டணங்கள், கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது UPIஐப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும்.
பதிவு மற்றும் ஆதார் மறு அங்கீகாரத்தின் போது பயன்படுத்தப்பட்ட தொடர்பு மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலைத் தவிர அனைத்து புலங்களும் பதிவேற்றப்பட்ட ஆவணங்களும் திருத்தும் சாளரத்தின் போது திருத்தப்படலாம் அல்லது மாற்றியமைக்கப்படலாம்.
“தேவைப்பட்டால், ஏதேனும் கூடுதல் கட்டணத்தைச் செலுத்திய பின்னரே இறுதித் திருத்தங்கள் பொருந்தும் என்பது முக்கியம். பாலினம், சாதி அல்லது மாற்றுத்திறனாளி பிரிவில் செய்யப்படும் மாற்றங்கள் கட்டணத் தொகையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், விண்ணப்பதாரர்களிடம் அதற்கேற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதிகமாகச் செலுத்தப்பட்ட பணம் திரும்பப் பெறப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்,” என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“