/indian-express-tamil/media/media_files/r49KiiTQPegeUC4ckE7N.jpg)
நீட் தேர்வு; நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் இங்கே
தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பச் செயல்முறையை விரைவில் தொடங்க உள்ள நிலையில், விண்ணப்பிக்க மாணவர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தேசிய தேர்வு முகமை மே 5, 2024 அன்று நீட் நுழைவுத் தேர்வை (NEET UG 2024) நடத்துகிறது. தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் https://neet.nta.nic.in/என்ற இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப செயல்முறை தொடங்கும் போது, தேசிய தேர்வு முகமை நீட் தேர்வின் தகவல் குறிப்பேட்டையும் பதிவேற்றும். விண்ணப்பதாரர்கள் தகவல் குறிப்பேட்டை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கும் முன் தகுதி, தேர்வுத் திட்டம், விண்ணப்ப செயல்முறை மற்றும் கட்டணம் போன்ற அனைத்து முக்கிய விபரங்களையும் பார்க்க அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் பட்டியல்
JPG வடிவத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் (4”X6”) JPG வடிவத்தில்
JPG வடிவத்தில் கையொப்பம்
இடது கை கட்டைவிரல் பதிவு (இடது கை கட்டைவிரல் கிடைக்காத பட்சத்தில், வலது கை கட்டைவிரல் பதிவு பயன்படுத்தப்படலாம்) JPG வடிவத்தில்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் PDF வடிவத்தில்
சாதி சான்றிதழ் (SC/ST/OBC/EWS போன்றவை) PDF வடிவத்தில் (தேவைப்படின்)
PwBD சான்றிதழ் PDF வடிவத்தில் (தேவைப்படின்)
குடியுரிமைச் சான்றிதழ்/தூதரகச் சான்றிதழ் அல்லது குடியுரிமைச் சான்றிதழின் ஏதேனும் ஆவணச் சான்று PDF வடிவத்தில் (தேவைப்படின்)
மேற்கண்ட ஆவணங்களை மேற்குறிப்பிட்ட வடிவத்தில் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.