எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நிகராக நாடு முழுவதும் விரும்பப்படும் ஆயுஷ் மருத்துவப் படிப்புகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவ படிப்புக்கு (BAMS) நீட் கட் ஆஃப் எவ்வளவு தேவை என்பதை இப்போது பார்ப்போம்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான இந்தியாவின் ஒரே நுழைவுத் தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் (NEET UG 2024) தேர்வாகும். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மட்டுமல்லாமல் ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் 15% அகில இந்திய ஓதுக்கீட்டு இடங்கள் மற்றும் 85% மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். PW Live வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு ஆயுர்வேத மருத்துவ படிப்புக்கு நீட் கட் ஆஃப் கீழ்கண்டவாறு இருக்கும்.
எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொது பிரிவு: 720 - 164
பொதுப் பிரிவு – மாற்றுத்திறனாளி: 163 - 146
எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி (SC/ST/OBC) பிரிவு: 163 - 129
எஸ்.சி/ ஓ.பி.சி – மாற்றுத்திறனாளி: 145 - 129
எஸ்.டி – மாற்றுத்திறனாளி: 141 - 129
தமிழகத்தில் உள்ள ஒரே அரசுக் கல்லூரியான அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நாகர்கோவிலில் தொடக்க தரவரிசை 75,000 ஆகவும், இறுதி தரவரிசை 60,000 ஆகவும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“