NEET UG 2024: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மே 5, 2024 அன்று நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான மருத்துவ மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், டாப் மருத்துவ கல்லூரிகள், முந்தைய ஆண்டின் கட்-ஆஃப்கள் உள்ளிட்டவற்றை இப்போது பார்ப்போம்.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசையில் உள்ள முதல் 8 கல்லூரிகள் நீட் ஆர்வலர்களுக்கு மிகவும் விரும்பப்படும் கல்லூரிகளாகும். சிறந்த தரவரிசையில் உள்ள கல்லூரியில் இடம் பெறுவது, சிறப்பான மருத்துவக் கல்வியைப் பெறுவதுடன், பிரகாசமான தொழில் வாய்ப்புகளையும் பெறுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கு டாப் கல்லூரிகளில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
1). அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), புது தில்லி: எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் - 98வது சதவீதம் அல்லது அதற்கு மேல்
2). முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER), சண்டிகர்: எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் - 97 முதல் 98 சதவீதம் வரை
3). கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர்: எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் - தோராயமாக 95 சதவிகிதம்
4). தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்), பெங்களூரு: எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் - சுமார் 94 சதவீதம்
5). ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), புதுச்சேரி: எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் - 92 முதல் 93 சதவிகிதம்
6). அமிர்த விஸ்வ வித்யாபீடம்: எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் - சுமார் 91 சதவீதம்
7). சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (SGPGI), லக்னோ: எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் - தோராயமாக 90 சதவிகிதம்
8). பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), வாரணாசி: எதிர்பார்க்கப்படும் கட்ஆஃப் - 89 முதல் 90 சதவீதம் வரை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“