NEET UG 2024: நாடு முழுவதும் மே 5, 2024 அன்று நடைபெற்ற NEET (UG) 2024 தேர்வுக்கான இறுதி விடைகுறிப்புகளை தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்போது PDF வடிவத்தில் விடைக் குறிப்புகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் exams.nta.ac.in/NEET இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
முன்னதாக, விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் ஓ.எம்.ஆர் (OMR) விடைத்தாள்களை சவால் செய்ய தேசிய தேர்வு முகமை ஒரு சாளரத்தை வழங்கியது. இந்த சவால் சாளரம் ஜூன் 1, 2024 அன்று காலை 11:00 மணிக்கு மூடப்பட்டது.
நீட் தேர்வு இறுதி விடைக் குறிப்புகளை பதிவிறக்குவது எப்படி?
படி 1: exams.nta.ac.in/NEET என்ற அதிகாரப்பூர்வ தேசிய தேர்வு முகமையின் இணையதளத்திற்குச் செல்லவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில், NEET (UG) 2024க்கான இணைப்பைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
படி 3: "NEET (UG) 2024க்கான இறுதி விடை குறிப்பு" என்ற அறிவிப்பு அல்லது இணைப்பைப் பார்க்கவும்.
படி 4: இறுதி விடைக் குறிப்பின் PDF ஐ அணுக, வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 5: PDF திறக்கப்பட்டதும், பதிவிறக்க ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் அதை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கவும் அல்லது வலது கிளிக் செய்து "இவ்வாறு சேமி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 6: சரியான பதில்களை மதிப்பாய்வு செய்ய பதிவிறக்கம் செய்யப்பட்ட PDF ஐத் திறந்து, நீட் மதிப்பெண் திட்டத்தைப் பயன்படுத்தி உங்கள் சாத்தியமான மதிப்பெண்களைக் கணக்கிடவும்.
வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பு அனைத்து வினாத்தாள் குறியீடுகளையும் உள்ளடக்கியது - Q, R, S, T - மற்றும் தேர்வின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான பதில்களை பட்டியலிடுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 அன்று அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீட் மதிப்பெண்கள் அனைத்து இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கும், அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் BVSc & AH படிப்புகளின் சேர்க்கைக்கும் தேவைப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“