Advertisment

நீட் தேர்வு 2024: ஹால் டிக்கெட் ரிலீஸ் எப்போது? கடந்த ஆண்டு தேர்வுக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு வெளியானது?

NEET UG 2024: நீட் தேர்வு ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? கடந்த ஆண்டு தேர்வுக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு வெளியானது?

author-image
WebDesk
New Update
neet accuracy

நீட் தேர்வு ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் தேர்வுக்கான (NEET UG) ஹால் டிக்கெட்டை வெளியிட உள்ளது. மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கான சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. 

Advertisment

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

முன்னதாக, 2021 ஆம் ஆண்டில், நீட் தேர்வுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கு, ஜூன் 29 ஆம் தேதி சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியிடப்பட்டது, ஜூலை 12 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு, ஜூலை 17 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இறுதியாக, முந்தைய (2023) ஆண்டில், நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தேர்வுக்கு முன்னதாக மே 4 அன்று அட்மிட் கார்டு வெளியிடப்பட்டது.

நீட் தேர்வு ஹால் டிக்கெட் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

படி 1: exams.nta.ac.in/NEET என்ற அதிகாரப்பூர்வ நீட் இணையதளத்தைப் பார்வையிடவும்

படி 2: முகப்புப் பக்கத்தில் "NEET அட்மிட் கார்டு 2024" பதிவிறக்க அறிவிப்பைக் கண்டறியவும்.

படி 3: இணைப்பைக் கிளிக் செய்யவும், நீங்கள் உள்நுழைவு பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.

படி 4: உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.

படி 5: "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.

படி 6: அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும் (அது PDF வடிவத்தில் இருக்கும்) மற்றும் எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

நீட் தேர்வு தேதி

மே 5, 2024 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 02:00 மணி முதல் மாலை 05:20 மணி வரை நாடு முழுவதும் (557 நகரங்கள்) மற்றும் வெளிநாடுகளில் (14 நகரங்கள்) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (UG) - 2024 ஐ நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில் நடைபெறும்.

நீட் தேர்வு முறை 

நீட் தேர்வு 180 பல தேர்வு கேள்விகளை (MCQs) கொண்டுள்ளது. இந்தத் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களைக் கொண்டது. விண்ணப்பதாரர்கள் தேர்வை முடிக்க 3 மணி நேரம் 20 நிமிடங்கள் உள்ளன. சரியான விடைகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (எதிர்மறை மதிப்பெண்) கழிக்கப்படும். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவதில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment