நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓ.எம்.ஆர் தாளை எப்படி நிரப்புவது? என்ன தகவல்களை குறிப்பிட வேண்டும்? என்பன உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG) நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் நீட் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில் நடைபெறுகிறது. அதாவது ஓ.எம்.ஆர் (OMR) தாளில் மாணவர்கள் விடைகளைக் குறிக்க வேண்டும்.
ஓ.எம்.ஆர் தாளைப் பூர்த்தி செய்வதற்கு முன், அந்தத் தாள் கணினி மென்பொருளால் செயலாக்கப்பட்டது என்பதை மாணவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மென்பொருள் அதிக உணர்திறன் கொண்டது மற்றும் துல்லியமாக நிரப்பப்பட்ட கருப்பு வட்டங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும். ஓ.எம்.ஆர் தாளை மாற்றவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது. ஓ.எம்.ஆர் தாளில் குறிப்பிட்ட இடத்தில் தேவையான தகவல்களை மட்டும் வழங்கவும்.
ஓ.எம்.ஆர் தாள்களில், வினாத் தொகுப்பு எண், வரிசை எண் மற்றும் வினாத்தொகுப்பு குறியீடு போன்ற அத்தியாவசிய தகவல்களை உள்ளிடுவதற்கு நியமிக்கப்பட்ட பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே எதையும் எழுதாமல் இருப்பது அல்லது குறிப்பிட்ட சின்னங்கள் அல்லது அடையாளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது அவசியம், இல்லை என்றால் ஓ.எம்.ஆர் தாள் நிராகரிக்கப்படக்கூடும்.
மாணவர்கள் பத்து இலக்க வரிசை எண்ணை எழுதி, குறிப்பிட்ட இடங்களில் நிரப்ப வேண்டும். 7-இலக்க வினாத் தொகுப்பு எண் நிரப்பப்பட்டு சரியாகக் குறிக்கப்பட்டுள்ளதை மாணவர் உறுதி செய்ய வேண்டும்.
ஓ.எம்.ஆர் தாளில், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் விண்ணப்பதாரரின் பெயர், தாயின் பெயர் மற்றும் தந்தையின் பெயர், தேர்வு மைய எண், தேர்வு மைய பெயர் ஆகியவற்றை சொந்த கையெழுத்து முறையில் எழுத வேண்டும்.
எந்த கேள்விக்கும் பல விருப்பங்களை தேர்வு செய்ய கூடாது. ஏனெனில் எல்லா கேள்விகளுக்கும் ஒரே ஒரு சரியான பதில் மட்டுமே பொருந்தும்.
விண்ணப்பதாரர்கள் கையொப்பமிட்டு, நேரத்தைக் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட மொழியில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், ஆங்கிலப் பதிப்பு உறுதியான பதிப்பாகக் கருதப்படும்.
ஓ.எம்.ஆர் தாளில் தங்கள் பதில்களைக் குறிக்கும் முன், மாணவர்கள் ஒரு நீல அல்லது கருப்பு பால் பாயிண்ட் பேனாவைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அத்தியாவசிய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஓ.எம்.ஆர் தாள் இரட்டை பக்கங்களைக் கொண்டது, முன்பக்கத்தில் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓ.எம்.ஆர் தாளைப் பூர்த்தி செய்வதற்கு முன் இந்த வழிகாட்டுதல்களை கவனமாக மதிப்பாய்வு செய்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கேள்வியின் பதில் தேர்வுக்கும் தொடர்புடைய வட்டத்தை முழுமையாக நிரப்புவது அவசியம். அவ்வாறு செய்யத் தவறினால், ஓ.எம்.ஆர் இயந்திரம் பதிலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் போக வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு வட்டத்தை குறிக்க வேண்டும். எந்த இடைவெளியையும் விட்டுவிடுவதையோ அல்லது வட்டத்தின் வடிவத்தை மாற்றுவதையோ தவிர்க்க வேண்டும், இது பதில் தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
தவறான குறியீடுகள் இடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை கிரேடிங் இயந்திரத்தால் கண்டறியப்படலாம் மற்றும் பதில் தவறானதாகக் குறிக்கப்படலாம்.
தேர்வர்கள் விடைத்தாளில் உள்ள இடத்தை எழுதி பார்க்க அல்லது கணக்கீடுகள் செய்து பார்க்க பயன்படுத்தக் கூடாது. இந்த நோக்கத்திற்காக வினாத்தாளில் பிரத்யேக இடம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் எழுதி பார்க்க விடைத்தாளைப் பயன்படுத்துவது குழப்பம் மற்றும் பிழைகளுக்கு வழிவகுக்கும்.
பதில்களை ஒருமுறை நிரப்பியவுடன், நீட் தேர்வு முறையின்படி விண்ணப்பதாரர்கள் அவற்றை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தேர்வர்கள் தங்கள் பதில்களை இறுதியாக நிரப்புவதற்கு முன் கவனமாக மதிப்பாய்வு செய்வது முக்கியம்.
ஓ.எம்.ஆர் தாளின் 2-வது பக்கத்தில் உள்ள வினாத் தொகுப்பு எண், வினாத்தொகுப்புடன் பொருந்துகிறதா என்பதை மாணவர்கள் சரிபார்க்க வேண்டும்.
நீட் தேர்வு முடிந்து, தற்காலிக விடைக் குறிப்புகள் வழங்கப்பட்ட பின்னர் மாணவர்கள் அவர்களுடைய ஓ.எம்.ஆர் தாளை தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். சந்தேகமான கேள்விகள், பதில்கள், மதிப்பெண் முறைகள் இருப்பின், தேவையான ஆதாரங்களுடன் அவற்றை மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.