Advertisment

NEET UG 2024: நெருங்கும் நீட் தேர்வு; எய்ம்ஸ் கட் ஆஃப் நிலவரம் என்ன?

NEET UG 2024: நாளை ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு; எய்ம்ஸ் கல்லூரிகளின் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் என்ன?

author-image
WebDesk
New Update
NEET preparation

எய்ம்ஸ் கல்லூரிகளின் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீட் நுழைவுத் தேர்வு நாளை (மே 5) நடைபெற உள்ள நிலையில் நாட்டின் முதன்மை மருத்துவக் கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ் கல்லூரிகளில் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET 2024) நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 557 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெறும். 

நீட் தேர்வில் டாப்பர்களாக வரும் மாணவர்களின் முதல் தேர்வு எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் தான். நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களாக உள்ள எய்ம்ஸ் கல்லூரிகளுக்கு மருத்துவ கலந்தாய்வுக் குழு (MCC) மூலம் கவுன்சலிங் நடத்தப்படும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தக் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு சுற்று கவுன்சிலிங்கிற்குப் பிறகும் எய்ம்ஸ் நிறுவனங்களின்  தொடக்க மற்றும் நிறைவு நீட் கட்-ஆஃப்களை மருத்துவ கலந்தாய்வுக் குழு வெளியிடுகிறது. இந்தநிலையில் எய்ம்ஸ் நிறுவனங்களின் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

கல்லூரியின் பெயர்

தொடக்க கட் ஆஃப்

நிறைவு கட் ஆஃப்

எய்ம்ஸ், புது தில்லி

1

55

எய்ம்ஸ், புவனேஸ்வர்

39

564

எய்ம்ஸ், ஜோத்பூர்

121

569

எய்ம்ஸ், போபால்

61

576

எய்ம்ஸ், ரிஷிகேஷ்

119

839

எய்ம்ஸ், நாக்பூர்

637

1328

எய்ம்ஸ், ராய்ப்பூர்

455

1052

எய்ம்ஸ், பாட்னா

510

1461

எய்ம்ஸ், மங்களகிரி

354

2383

எய்ம்ஸ், ரேபரேலி

1242

2991

எய்ம்ஸ், ராஜ்கோட்

1997

3352

எய்ம்ஸ், பதிண்டா

358

1920

எய்ம்ஸ், கோரக்பூர்

1192

2606

எய்ம்ஸ், பிலாஸ்பூர், இமாச்சல பிரதேசம்

959

3109

எய்ம்ஸ், குவஹாத்தி

1834

4073

எய்ம்ஸ், ஜம்மு

1351

4497

எய்ம்ஸ், பீபி நகர், ஹைதராபாத்

1764

3061

எய்ம்ஸ், தியோகார்

1745

4010

எய்ம்ஸ், கல்யாணி

1213

2307

எய்ம்ஸ், மதுரை

4504

5947

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment