NEET Counselling: கட் ஆஃப் கம்மியா இருந்தாலும் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்; எங்கு? எப்படி?
NEET Counselling: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சலிங் தொடக்கம்; கட் ஆஃப் குறைவாக இருந்தாலும் இந்தக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைக்க வாய்ப்பு; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்?
NEET Counselling: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சலிங் தொடக்கம்; கட் ஆஃப் குறைவாக இருந்தாலும் இந்தக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைக்க வாய்ப்பு; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சலிங் தொடங்கியுள்ள நிலையில், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சுயநிதி கல்லூரிகளில் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என கல்வி ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
Advertisment
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) கவுன்சிலிங் 2024க்கான விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 14 அன்று தொடங்கியது. முதல் சுற்றுக்கான விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20 வரை (நண்பகல் 12) நடைபெறும் மற்றும் ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 20 (பிற்பகல் 3) வரை கட்டணம் செலுத்தும் வசதி கிடைக்கும். சாய்ஸ் ஃபில்லிங் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு முடிவடையும். ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11.55 மணி வரை சாய்ஸ் லாக்கிங் தொடங்கும். முதல் சுற்றுக்கான இருக்கை ஒதுக்கீடு செயலாக்கம் ஆகஸ்ட் 21 முதல் 22 வரை நடக்கும். முதல் சுற்று இட ஒதுக்கீடு முடிவு ஆகஸ்ட் 23 அன்று அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 24 மற்றும் 29 க்கு இடையில் ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சென்று சேர்க்கை பெற வேண்டும்.
நீட் கவுன்சிலிங்கின் 2வது சுற்றுக்கு, பதிவு செயல்முறை செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10 (மதியம் 12) வரை தொடரும். கட்டணம் செலுத்தும் வசதி செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 3 மணி வரை கிடைக்கும். சாய்ஸ் ஃபில்லிங் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு முடிவடையும். செப்டம்பர் 10-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11.55 மணி வரை சாய்ஸ் லாக்கிங் நடைபெறும். 2-வது சுற்று இட ஒதுக்கீடு முடிவு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்படும்.
இந்த நிலையில், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சுயநிதி கல்லூரிகளில் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
அதன்படி, எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்று ஆர்வமுள்ள தமிழக மாணவர்கள், கல்வி செலவைப் பற்றி கவலைப்படாதவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். இந்தக் கல்லூரிகளில் 200 மதிப்பெண்களுக்கு கூட சீட் கிடைக்கிறது.
சுயநிதி கல்லூரிகளின் கடைசி ரேங்க் விபரம்
ஸ்ரீ ராமசந்திரா மெடிக்கல் காலேஜ், போரூர், சென்னை – 270532
சவீதா மெடிக்கல் காலேஜ், சென்னை – 609404
எஸ்.ஆர்.எம் மெடிக்கல் காலேஜ், சென்னை – 744166
ஸ்ரீ லலிதாம்பிகா மெடிக்கல் காலேஜ், சென்னை – 873049
செட்டிநாடு ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், செங்கல்பட்டு – 1022411
ஸ்ரீ சத்ய சாய் மெடிக்கல் காலேஜ், செங்கல்பட்டு – 1185551
வேல்ஸ் மெடிக்கல் காலேஜ், திருவள்ளூர் – 1196668
ஏ.சி.எஸ் மெடிக்கல் காலேஜ், சென்னை – 1210857
வி.எம்.கே.வி மெடிக்கல் காலேஜ், சேலம் – 1213823
ஆறுபடை வீடு மெடிக்கல் காலேஜ், புதுச்சேரி – 1217052
பாரத் மெடிக்கல் காலேஜ், சென்னை –1218381
ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் காலேஜ், சென்னை - 1218682
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“