அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சலிங்கிற்கான விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கும் என மருத்துவ கவுன்சலிங் கமிட்டி அறிவித்துள்ளது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET-UG) முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் 4 அன்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. ஒரு சுருக்கமான சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2024 அமர்வுக்கான மறு திருத்தப்பட்ட ஸ்கோர்கார்டையும் கட்-ஆஃப்பையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
இந்தநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சலிங்கின் அட்டவணையை மருத்துவ கவுன்சலிங் கமிட்டி அறிவித்துள்ளது.
அதன்படி, நீட் கவுன்சலிங் 3 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்று நீட் கவுன்சலிங் விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி முடிவடையும். ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் விருப்ப கல்லூரிகளை நிரப்ப வேண்டும். ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும். ஆகஸ்ட் 21 மற்றும் 22 தேதிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். ஆகஸ்ட் 23 ஆம் தேதி இறுதி முடிவு வெளியிடப்படும். சீட் பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 24 முதல் 29 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கைப் பெற வேண்டும்.
இரண்டாம் சுற்று நீட் கவுன்சலிங் விண்ணப்பப்பதிவு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி முடிவடையும். செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 10 தேதிக்குள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் விருப்ப கல்லூரிகளை நிரப்ப வேண்டும். செப்டம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். செப்டம்பர் 13 ஆம் தேதி இறுதி முடிவு வெளியிடப்படும். சீட் பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 14 முதல் 20 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கைப் பெற வேண்டும்.
மூன்றாம் சுற்று நீட் கவுன்சலிங் விண்ணப்பப்பதிவு செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடையும். செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 தேதிக்குள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் விருப்ப கல்லூரிகளை நிரப்ப வேண்டும். அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். அக்டோபர் 5 ஆம் தேதி இறுதி முடிவு வெளியிடப்படும். சீட் பெற்ற மாணவர்கள் அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கைப் பெற வேண்டும்.
இறுதி காலியிட சுற்று அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும். இவ்வாறு மருத்துவ கவுன்சலிங் கமிட்டி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.