தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2024 தேர்வுகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - இளங்கலை (NEET UG) பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது. NEET UG 2024 பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள பட்டதாரி மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) இறுதி செய்துள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) NEET UG தேர்வை நடத்துகிறது.
மாணவர்கள் NEET UG 2024 பாடத்திட்டத்தை NMC அதிகாரப்பூர்வ இணையதளமான nmc.org.in இல் பார்க்கலாம். NEET UG பாடத்திட்டம் 2024 இணையதளத்தில் குறிப்புக்காகவும் ஆய்வுப் பொருட்களைத் தயாரிக்கவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பல்வேறு மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் NEET 2024 பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
NEET 2024 குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் PDF இல் உள்ள பிழைகளை சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், அடுத்த ஆண்டு நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துமா அல்லது தேசிய மருத்துவ ஆணையம் நடத்துமா என பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
NEET 2024 பாடத்திட்டத்தை NMC "உண்மையில்" குறைத்துள்ளதா என்று ஒரு எக்ஸ் தள பயனர் கேள்வி எழுப்பினார்.
NMC இப்போது தேர்வை நடத்துமா என்று ஒரு ஆர்வலர் கேள்வி எழுப்ப "இப்போது பாடத்திட்டம் தேசிய மருத்துவ ஆணையத்தால் குறைக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை தேர்வு நடத்தும் அமைப்பாக இருக்காது?" என்று மற்றொருவர் பதிலளித்தார்.
இணையதளத்தைக் குறிப்பிட்டு, ஒரு மாணவர் ஒரு பதிவில், “இது நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டதாகக் குறிப்பிடும் அறிவிப்பு., ஆனால் தேசிய மருத்துவ ஆணைய தளம் தரவுத்தளப் பிழையைக் காட்டுகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
முதுகலை மாணவர் ஒருவர், “NEET UG -2024 இல் புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் (விலங்கியல்) பூச்சியின் உருவவியல் மற்றும் உடற்கூறியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அடைப்புக்குறிக்குள் தவளை (தவளை ஒரு பூச்சி அல்ல) என்று கொடுக்கப்பட்டுள்ளது... இது தவளை உருவவியல் அல்லது கரப்பான் பூச்சியா, தயவுசெய்து பாருங்கள்," என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“