Advertisment

NEET UG 2024: நீட் தேர்வு வருகைப் பதிவு 96%; ஆண்களை விட பெண்கள் அதிகம்

NEET UG 2024: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 96% தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு; ஆண்களை விட பெண்கள் அதிகம்; தமிழ்நாடு 4 ஆம் இடம்

author-image
WebDesk
New Update
neet reg

நீட் தேர்வு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 

Advertisment

NEET UG 2024: தேசிய தேர்வு முகமை (NTA) மே 5 அன்று இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2024 தேர்வை நடத்தியது, இதில் ஒட்டுமொத்த வருகைப்பதிவு 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024: NTA reports over 96% attendance; more girls than boys appeared

தேசிய தேர்வு முகமை இந்த மாதம் தற்காலிக மற்றும் இறுதி விடைக்குறிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. வெளியிடப்பட்டதும், விடைக்குறிப்புகள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான exams.nta.ac.in/NEET பக்கத்தில் கிடைக்கும். விடைத்தாள்கள் வெளியான பிறகு, நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 அன்று வெளியிடப்படும்.

பாலினம் வாரியான விபரம்

தேசிய தேர்வு முகமை பகிர்ந்த தரவுகளின்படி, மொத்தம் 9,96,393 ஆண்கள் மற்றும் 13,31,321 பெண்கள் மற்றும் 17 திருநங்கைகள் தேர்வெழுதியுள்ளனர்.

ஒட்டுமொத்த வருகைப்பதிவு 96.94 சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில், ஆண் விண்ணப்பதாரர்களின் வருகை 96.92 சதவீதமாகவும், பெண் விண்ணப்பதாரர்களின் வருகை 96.96 சதவீதமாகவும், திருநங்கைகளின் வருகை 94.44 சதவீதமாகவும் இருந்தது.

டாப் 5 மாநிலங்கள்

மாநில வாரியான செயல்திறன், உத்தரப் பிரதேசத்தில் 1,64,779 பெண் விண்ணப்பதாரர்கள், 1 திருநங்கை மற்றும் 1,67,690 ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 1,56,795 பெண்களும், 1,18,243 ஆண்களும், 2 திருநங்கை மாணவர்களும் நீட் தேர்வு எழுதினர்.

தேசிய தேர்வு முகமை வழங்கிய தரவுகளின்படி, ராஜஸ்தான் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண் விண்ணப்பதாரர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது, மேலும் 88,000 க்கும் மேற்பட்ட பெண் விண்ணப்பதாரர்களுடன் மொத்த எண்ணிக்கை 1.93 லட்சமாக உள்ளது. சுவாரஸ்யமாக, திருநங்கைகள் இல்லாத டாப் 5 மாநிலங்களில் ராஜஸ்தான் மட்டுமே உள்ளது.

இம்முறை நீட் தேர்வில் ராஜஸ்தானிலும் பிரச்சனை நடந்துள்ளது. மே 5 அன்று, ராஜஸ்தானின் சவாய் மாதோபூர், மாண்டவுன், பெண்கள் மேல்நிலை ஆதர்ஷ் வித்யா மந்திரில் நடந்த ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவத்தில், இந்தி-மீடியம் மாணவர்களுக்கு ஆங்கில வழி வினாத்தாள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, மாணவர்கள் ஆங்கில வழிக் கேள்வித் தாளுடன் வலுக்கட்டாயமாக தேர்வு அறையை விட்டு வெளியேறினர், பின்னர் அது சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை கூறியது.

பீகாரில் இருந்து வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு அறிக்கை வந்தது, அங்கு பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) "ஹால் டிக்கெட்கள், பிந்தைய தேதியிட்ட காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை" நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு தொடர்பாக "கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலின் உறுப்பினர்களிடமிருந்து" கைப்பற்றியதாகக் கூறியது. பீகாரில், இந்த முறை மொத்தம் 1,36,188 தேர்வர்கள் (72661 ஆண்கள் மற்றும் 63527 பெண்கள்) தேர்வெழுதினர்.

மாநில வாரியாக வருகை

1.53 லட்சம் விண்ணப்பதாரர்களுடன் தமிழ்நாடு நான்காவது இடத்திலும், 1.50 லட்சம் மாணவர்களுடன் கர்நாடகா அடுத்த இடத்தில் உள்ளது.

கேரளா 1.38 லட்சம் பேருடன் ஆறாவது இடத்தில் உள்ளது. அடுத்து பீகார் 1.36 லட்சத்துடன் 7 ஆவது இடத்தில் உள்ளது. மேற்கு வங்கம் சுமார் 1.17 லட்சம் மாணவர்கள் எட்டாவது இடத்திலும், குஜராத் மற்றும் டெல்லி முறையே 86000 மற்றும் 66000 விண்ணப்பதாரர்களுடன் ஒன்பதாவது மற்றும் 10வது இடங்களைப் பெற்றுள்ளன.

சுவாரஸ்யமாக, முக்கியமாக தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றி ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களின் வருகைக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment