தேசிய தேர்வு முகமை (NTA) நீட் தேர்வுக்கான (NEET-UG) திருத்தப்பட்ட தகுதி பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தேர்வில் முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 61ல் இருந்து 17 ஆக குறைய உள்ளது.
இயற்பியல் தாளில் உள்ள ஒரு கேள்வியில் உள்ள ஆப்ஷன்களில் ஒன்று மட்டுமே சரியானது என்று உச்ச நீதிமன்றத்தின் கோரிக்கையின்படி அமைக்கப்பட்ட ஐ.ஐ.டி-டெல்லி நிபுணர் குழு பரிந்துரைத்த பிறகு தகுதிப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. பழைய மற்றும் புதிய என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள் மூலம் நான்கு ஆப்ஷன்களில் இரண்டு சரியாக இருக்கும் என்று பல மாணவர்கள் புகார் கூறினர். ஆனால், ஒரே ஒரு விடை மட்டும் சரியானதாகக் கருதப்பட்ட நிலையில், மற்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஐந்து மதிப்பெண்களை இழந்தனர், அதாவது தவறான பதிலுக்கு நான்கு மதிப்பெண்கள் மற்றும் ஒரு எதிர்மறை மதிப்பெண்.
இந்த திருத்தம் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் தரவரிசையில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. இந்த முடிவு முதன்மையாக 4.2 லட்சம் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை பாதிக்கும், இதில் 44 பேர் 720க்கு 720 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றவர்கள். தற்போது 61 ஆக இருக்கும் டாப்பர்களின் எண்ணிக்கை, மதிப்பெண்கள் கழித்த பிறகு, 17 ஆக குறையும்.
நாட்டில் உள்ள 1.08 மருத்துவ இடங்களுக்கான நீட் தேர்வை 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருப்பதைக் கருத்தில் கொண்டு, தரவரிசை மாற்றம் பல மாணவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். இவற்றில், 56,000 இடங்கள் அரசு நிறுவனங்களில் உள்ளன, அவை சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த கட்டணங்களுக்காக அதிகம் விரும்பப்படுகின்றன.
50,000 முதல் 1 லட்சம் வரை தரவரிசையில் உள்ள விண்ணப்பதாரர்கள் மீது மிகப்பெரிய தாக்கம் இருக்கும், ஏனெனில், முன்பு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற வாய்ப்புள்ள16,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், அந்த வாய்ப்பிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது. 33,000 முதல் 50,000 வரையிலான தரவரிசையில் இடம்பெறும் 44 மாணவர்களின் தாக்கம் அதிகம் இருக்காது, ஆனால் அவர்களின் தரவரிசையில் மாற்றம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“