MBBS Counselling: அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்; புதுச்சேரி ஜிப்மர் முதல் சுற்று கட் ஆஃப் என்ன?
NEET UG 2024: அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கின் முதல் சுற்றில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜிப்மர் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் என்ன? ரேங்க் என்ன? முழு விபரம் இங்கே
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதல் சுற்று கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு அகில இந்திய ஒதுக்கீடு கவுன்சலிங் மூலம் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதற்கான முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கான கட் ஆஃப் எவ்வளவு இருந்தது என்பது மெடிக்கல் எண்ட்ரோல் எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜிப்மர் புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் விபரம்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 710 ரேங்க் – 350
ஓ.பி.சி
கட் ஆஃப் – 705 ரேங்க் – 807
இ.டபுள்யூ.எஸ்
கட் ஆஃப் – 700 ரேங்க் – 1464
எஸ்.சி
கட் ஆஃப் – 681 ரேங்க் – 6617
எஸ்.டி
கட் ஆஃப் – 676 ரேங்க் – 8697
ஜிப்மர் காரைக்கால் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் விபரம்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 692 ரேங்க் – 2949
ஓ.பி.சி
கட் ஆஃப் – 689 ரேங்க் – 4175
இ.டபுள்யூ.எஸ்
கட் ஆஃப் – 682 ரேங்க் – 6130
எஸ்.சி
கட் ஆஃப் – 652 ரேங்க் – 24789
எஸ்.டி
கட் ஆஃப் – 613 ரேங்க் – 62372
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“