சர்ச்சைக்குரிய இயற்பியல் கேள்விக்கான சரியான பதிலைப் பரிசீலித்து, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2024 முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) மறுதிருத்தம் செய்துள்ளது. அகில இந்திய தரவரிசையில் முதலிடத்தை 17 மாணவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் 99.9992714 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க:
நீட் தேர்வுக்கான திருத்தப்பட்ட முடிவுகளில் பொதுப் பிரிவினருக்கான இந்த ஆண்டு கட்-ஆஃப் ஜூன் 4 இல் 720-164 ஆக இருந்து தற்போது 720-162 ஆக குறைந்துள்ளது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, நீட் கட்-ஆஃப் 161-127 ஆகும். இதேபோல், எஸ்.சி (SC), எஸ்.டி (ST) மற்றும் ஓ.பி.சி மாற்றுத்திறனாளி (OBC-PH) விண்ணப்பதாரர்களுக்கான நீட் கட் ஆஃப் 143-127 ஆகும்.
பொதுப் பிரிவைச் சேர்ந்த மருத்துவ விண்ணப்பதாரர்களுக்கான எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) படிப்புகளுக்கான நீட் கட்-ஆஃப் சதவீதம் 50 ஆகவும், ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு நீட் கட் ஆஃப் சதவீதம் 40 ஆகவும் உள்ளது. நீட் தேர்வில் அகில இந்திய பொதுத் தகுதிப் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையில் நீட் சதவீதத்தை தேசிய தேர்வு முகமை தீர்மானிக்கிறது.
NEET UG கட்-ஆஃப் 2024
/indian-express-tamil/media/post_attachments/c0cab3ba-549.jpg)
இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 24,06,079 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர், அவர்களில் 23,33,162 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்த மருத்துவ ஆர்வலர்களின் எண்ணிக்கை 13,15,853 ஆகும். ஜூலை 26 அன்று தேசிய தேர்வு முகமை பகிர்ந்த தரவுகளின்படி, மொத்த தகுதி பெற்ற மாணவர்களில், 5,46,566 மாணவர்கள், 7,69,277 மாணவிகள் மற்றும் 10 திருநங்கைகள்.
நீட் திருத்தப்பட்ட முடிவு அறிவிப்புடன், நீட் தேர்வுக்கான அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) சீட் கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இருப்பினும் மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மற்றும் ஆயுஷ் சேர்க்கை மத்திய ஆலோசனைக் குழு (AACCC) ஆகியவை நீட் கவுன்சிலிங் தேதிகள் குறித்த புதுப்பிப்பை இன்னும் அறிவிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“