தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்வுக்கு 23 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024: Record 23.81 lakh candidates register, girls outnumber boys
இம்முறை, நீட் நுழைவுத் தேர்வுக்கான ஒட்டுமொத்த பதிவுகளில், தேசிய தேர்வு முகமை (NTA) முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதனை படைத்துள்ளது.
இந்த முறை, நீட் தேர்வுக்கு மொத்தம் 23,81,833 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர், அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 24 மாணவர்கள் ‘மூன்றாம் பாலினம்’ பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர். பதிவுசெய்யப்பட்ட 23 லட்சம் மாணவர்களில், 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் OBC NCL பிரிவைச் சேர்ந்தவர்கள், 6 லட்சம் பொதுப் பிரிவு மாணவர்கள், 3.5 லட்சம் பேர் பட்டியல் சாதி (SC) மாணவர்கள், 1.8 லட்சம் மாணவர்கள் Gen-EWS பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1.5 லட்சம் மாணவர்கள் பழங்குடியினர் (ST) பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நீட் தேர்வு மே 5 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, கடந்த வாரம் மக்களவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகும், தேர்வு தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியுள்ளது.
பிராந்திய வாரியாக, உத்தரபிரதேசம் 3,39,125 பதிவுகளுடன் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை பதிவு செய்துள்ளது, அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா 279904. ராஜஸ்தான் 1,96,139 ஆகியவை உள்ளன. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் 155216 விண்ணப்பங்களும், கர்நாடகாவில் 154210 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுவாரஸ்யமாக, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் கூட, கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் 1.4 லட்சம் விண்ணப்பதாரர்களுடன் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இருந்தனர், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1.3 லட்சம்) மற்றும் ராஜஸ்தான் (1 லட்சம்) ஆகியவை இருந்தன.
முந்தைய ஆண்டுகளின் ஒப்பீடு
கடந்த ஆண்டு, மொத்தம் 20,87,449 விண்ணப்பதாரர்கள் நீட் (NEET UG 2023) தேர்வுக்கு பதிவு செய்தனர் மற்றும் தேர்வு மே 7 அன்று நடைபெற்றது, அவர்களில் 97.7 சதவீதம் பேர் தேர்வு எழுதினர் மற்றும் மறுதேர்வு கிட்டத்தட்ட 8,700 விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 499 நகரங்களில் 4097 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2022ல் 18 லட்சமாக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023ல் 20.87 லட்சமாக உயர்ந்து, இந்த ஆண்டு கிட்டத்தட்ட மூன்று லட்சம் அதிகரித்துள்ளது.
தேர்வு எழுதும் மற்றும் தகுதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் இதேபோன்ற போக்கு காணப்பட்டுள்ளது, 2022 இல் 17 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2023 இல் 20.36 லட்சமாக அதிகரித்துள்ளது மற்றும் இந்த ஆண்டு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2022ல் 9.93 லட்சத்தில் இருந்து 2023ல் 11.45 லட்சமாக அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.