NEET UG 2024: கடந்த 5 ஆண்டு நீட் தேர்வு கட் ஆஃப் நிலவரம் இங்கே

NEET UG 2024: விரைவில் நீட் தேர்வு ரிசல்ட்; கடந்த 5 ஆண்டு கட் ஆஃப் நிலவரம் இங்கே

NEET UG 2024: விரைவில் நீட் தேர்வு ரிசல்ட்; கடந்த 5 ஆண்டு கட் ஆஃப் நிலவரம் இங்கே

author-image
WebDesk
New Update
neet result

நீட் தேர்வு ரிசல்ட் (எக்ஸ்பிரஸ் பிரதிநிதித்துவ படம்)

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

NEET UG 2024: தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) முடிவுகள் மற்றும் விடைக்குறிப்புகளை வெளியிடும்.

ஆங்கிலத்தில் படிக்க: NEET UG 2024 Result: Cut-off from past 5 years

Advertisment

இந்த ஆண்டு, மே 5, ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது, இதில் மொத்தம் 13,31,321 பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 9,96,393 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 17 திருநங்கைகள் தேர்வெழுதினர். இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 உட்பட 571 நகரங்களில் தேர்வை நடத்துவதற்காக 4,750 தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை தயார் செய்தது.

கடந்த ஆண்டு, பொதுப் பிரிவினருக்கான நீட் தேர்வு கட்-ஆஃப் சதவீதம் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் விண்ணப்பதாரர்களுக்கு 50 ஆகவும், ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 40 சதவீதமாகவும் இருந்தது. நீட் தேர்வுக்கான அகில இந்திய பொதுத் தகுதிப் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையில் நீட் தேர்வின் சதவீதத்தை தேசிய தேர்வு முகமை தீர்மானிக்கும்.

2023 இல் பொதுப் பிரிவினருக்கான நீட் கட்-ஆஃப் 715-117 ஆக இருந்து 2023 இல் 720-137 ஆக அதிகரித்தது. இதே போல், எஸ்.சி (SC), எஸ்.டி (ST) மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கான கட்-ஆஃப் 2022 இல் 116-93 இல் இருந்து 2023 இல் 136-107 ஆக அதிகரித்தது.

Advertisment
Advertisements

இருப்பினும், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான கட்-ஆஃப் 2022 இல் 116-105 இல் இருந்து 720-137 ஆக 2023 இல் கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற பிரிவினர்களுடன் ஒப்பிடுகையில் இது மிகப் பெரிய அதிகரிப்பாகும்.

NEET UG 2024: முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் நிலவரம்

பிரிவு

கட்-ஆஃப் சதவீதம்

கட்-ஆஃப் 2023

கட்-ஆஃப் 2022

கட்-ஆஃப் 2021

கட்-ஆஃப் 2020

கட்-ஆஃப் 2019

பொதுப்பிரிவு

50

720-137

715-117

720-138

720-147

701-134

பொதுப்பிரிவு - மாற்றுத்திறனாளி

45

720-137

116-105

137-122

146-129

133-120

எஸ்.சி

40

136-107

116-93

137-108

146-113

133-107

எஸ்.டி

40

136-107

116-93

137-108

137-108

133-107

ஓ.பி.சி

45

136-107

116-93

137-108

146-113

133-107

SC/ST/OBC-PH

40

120-107

104-93

121-108

128-113

119-107

நீட் தேர்வானது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல் இரண்டையும் உள்ளடக்கியது) ஆகிய மூன்று முக்கிய பாடங்களில் அறிவை சோதிக்கிறது. ஒவ்வொரு பாடமும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

- பிரிவு ஏ இல் 35 கேள்விகள் உள்ளன, மேலும் அவை அனைத்தும் கட்டாயம் முயற்சிக்க வேண்டும்.

- பிரிவு பி 15 கேள்விகளை வழங்கியது, ஆனால் மாணவர்கள் அவற்றில் ஏதேனும் 10 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு, நீட் 2023 தேர்வில், முதல் இடத்தை இரண்டு மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்; தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் ஜே. ஆந்திராவைச் சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி. இருவரும் 720 மதிப்பெண்கள் பெற்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Neet

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: