NEET UG 2024: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) முடிவுகளை தேசிய தேர்வு முகமை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் exams.nta.ac.in என்ற இணையதளத்தில் முடிவைப் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க:
இன்று வெளியிடப்பட்ட இறுதி விடைத்தாள் அடிப்படையில் நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும், தேசிய தேர்வு முகமை முடிவுகளை சாதனை நேரத்தில் அறிவித்தது. தேசிய தேர்வு முகமை விரைவில் டாப்பர்களின் பெயர்களை கட்-ஆஃப் உடன் அறிவிக்கும்.
தேர்வர்கள் NEET UG 2024 மதிப்பெண் அட்டையை exams.nta.ac.in/neet இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். நீட் தேர்வு மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் தங்கள் பதிவு எண்கள் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்த வேண்டும்.
தேசிய தேர்வு முகமை பகிர்ந்த தரவுகளின்படி, மொத்தம் 9,96,393 ஆண் விண்ணப்பதாரர்கள் 13,31,321 பெண் விண்ணப்பதாரர்கள், 17 திருநங்கைகளும் தேர்வெழுதியுள்ளனர். ஒட்டுமொத்த வருகைப்பதிவு 96.94 சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில், ஆண் விண்ணப்பதாரர்களின் வருகை 96.92 சதவீதமாகவும், பெண் விண்ணப்பதாரர்கள் 96.96 சதவீதமாகவும், திருநங்கைகளின் வருகை 94.44 சதவீதமாகவும் இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“